பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா | 6 பதச்சோறு கொதிக்கும் உலேப்பானையிலிருந்து ஒரு சோற்றையெடுத்துப் பதம் பார்க்கிறவர்கள், அந்தப் பருக்கையைத் தேடிப் பொறுக்கி யெடுப்பதில்லை. விரலில் அகப்படுவதை அழுத்தி நசுக்கி மொத் தச் சோற்றுக்கும் பத நிலைமையைப் பரிசோதிக்கிரு.ர்கள். புதிதா கச் சமைக்கப்படும் ஒரு சமூகத்திலும் இதே நிலைமைதான். அந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பரிசோதிக்கும் கால சக்தியின் விரல்கள், அதற்காகத் தேடிப் பார்த்து ஒரு தனி நபரைப் பொறுக்கியெடுப்பதில்லை. விரல்களினிடுக்கிலே சிக்கியவனை அல்லது சிக்கியவளைக்கொண்டு சமூகத்தின் பத நிலைமையை அறிந்து கொள்ளுகிறது. ' நான் காலத்தின் விரல்களில் சிக்கிய சோறுதான் போலிருக்கிறது ' என்ற அளவுக்குக் குமுதம் தன் நிலையைப் புரிந்துகொண்டிருந்தாள். அவளது தாய் மங்கையர்க்கரசி திடீர் திடீரென்று உணர்ச்சி வேகத்துடன், அந்தச் சிக்கலைப்பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம் குமுதம் அதே மனே நிலையிலிருந்து தான் பதில் சொல்லி வாதாடுவாள். ‘. . - அம்மா! அந்த மகாபுருஷரை ஏன் குறை சொல்லுகிருய் ? உலகம் முழுவதையும் உய்விக்க வந்த காந்தி என் ஒருத்தியை மாத் திரம் வெற்று வாழ்க்கைக்கு ஆளாக்கி விட்டுவிட்டார் என்று சொல்லுவது பொருந்துமா ? ' என்று தாயின் முணுமுணுப்பு களுக்குப் பதில் சொல்லுவாள். - உங்கள் காந்தியை நான் என்ன குறை சொல்லிவிட்டேன்: உன் விதி அப்படியிருந்தால் அதற்கு யாரைக் குறை சொல்லித் தான் என்ன பயன்? ' என்பாள் மங்கையர்க்கரசி. ат-10