பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i46 பதச் சோறு 'பார்த்தாயா! மறுபடி ஆரம்பித்து விட்டாயே. இது விதி யல்ல அம்மா. அதைக்கூட மாற்றிவிடும் காலவேகம் என்கிற ஒரு மகாசக்தி. ஆருயிரம் மைல்களுக்கப்பாலிருக்கிற ஒரு அன் னிய ஜாதியாரின் அடிமைகள் என்று விதிக்கப்பட்டிருந்த, நாற் பதுகோடி மக்கள் தலையெழுத்தை ஒரே நொடியில் அழித்து, அவ்வளவு பேர்களும் ' சுதந்திரர்கள் என்று எழுதிய சக்தி அது ' என்று பிரசங்கம் செய்வாள் குமுதம். மங்கையர்க்கரசி, ' நான் எப்படிச் சொன்னலும் அதை மடக்கி அப்படியில்லே இப்படியென்கிருய். நான் உன்னைப்போலக் கல்வியெல்லாம் படித்தவளில்லை. எங்கள் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததெல்லாம் தான் சரியென்று நம்புகிறவள். இவ்வளவு சட்டம் பேசுகிறவள் நீதான் எனக்குப் புரியும் பாஷையில் சொல் லேன். உன் புருஷன் எதற்காக இப்படி எல்லாம் வம்பு செய்ய வேண்டும் ? நீ எதற்காக இப்படி வீம்பு பிடிக்க வேண்டும்? ' என்று கேட்பாள். குமுதம், ' நூறுதடவை சொல்லியாகிவிட்டது. உனக்கு அது பிடிக்க வில்லை. அதல்ை புரியவில்லை யென்கிருய். இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். அவர் உன் மருமகன். இந்த தேசத்திலே வெள்ளைக்காரன் படைத்துவிட்டுவிட்டுப்போன ஜாதி. நான் காந்தி மகாத்மா சமைக்கத் தொடங்கிய புதிய பாரத ஜாதி. இரண்டும் முதல் கலப்பிலே ஒட்டமுடியாமல் தத்தளிக்கின்றன. அவ்வளவுதான் ’ என்பாள். ' உங்கள் மகன் பாபு? அவன் என்ன ஜாதி ?’ என்று குரலிலே கோபம் தொனிக்கக் கேட்பாள் மங்கையர்க்கரசி, குமுதத்திற்கு அந்த தொனி நன்ருகத் தெரியும். ஆயினும் பொறுமையை இழக்காமல் நிதானமாக அவன்தான் புதிய பாரத சமூகத்தின் முதல் தலைமுறை யென்று நம்பிக்கொண்டிருக் கிறேன்’ என்பாள். மங்கையர்க்கரசி மகளைப் பரிதாபத்துடன் பார்த்து, நீ இந் நேரம் சொன்னதில் எனக்கு ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. புருஷனும், பெண்சாதியும்தான் மனது ஒத்துக்கொள்ளவில்லை. 'நீ கோர்ட்டுக்குப் போய், உங்களப்பா சொல்லுகிறபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்தால் என்ன? உங்கள் காந்தி விரதமே iணுகிப் போய்விடுமோ? " என்பாள். - குமுதம் கண்களில் கண்ணிர் துளிர்த்துவிடும். அதைக் கண்ட மங்கையர்க்கரசியின் நெஞ்சம் பதைத்துப்போகும். ஏற் கெனவே நொந்துபோயிருந்த மகள் உள்ளத்தைக் கிளறிவிட்டு விட்டோமே என்று பச்சாத்தாபம் எழும். மகள் அககில்