பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா 147 போய் 'உன் கதியை நினைத்தால் வயிறு கொதிக்கிறது; அந்த வேகத்திலே ஏதாவது சொல்லிவிடுகிறேன். நீ செய்வதெல்லாம் சரியாகத்தானிருக்குமென்று மனத்துக்குத் தெரிகிறது. இருந்தா லும் அஞ்ஞானம் அதை உடனே மறைத்து விடுகிறது ' என்று குமுதத்தின் கூந்தலைக் கோதுவதுபோல விரலையோட்டுவாள். குமுதம் சிரித்துக்கொண்டே என் அஞ்ஞானி அம்மாவைத் தான் எனக்குப் பிடித்திருக்கிறது ' என்று தாயின்மேல் செல்ல மாகச் சாய்வாள். குமுதம் சொல்வது போலத் தாய் மகளுக்கிடையில் இந்த மாதிரித் தர்க்க வாதம் இதுவரை நூறுதடவைகூட நடந்திருக் கும். மங்கையர்க்கரசி அப்போதைக்குப் பேச்சை நிறுத்துவாள் ; ஆனல் மறுபடியும் சமயம் வந்தவுடன் பழைய தோரணையி லேயே தொடங்கி விடுவாள். 兴 景 * அன்று இருவரும் அந்த மாதிரியான ஒரு வாதப் பிரதி வாதத்திற்கு ஏற்ற மனேநிலையில் இல்லை. உள்ளூர இருந்த பதைப்பை வெளியில் காட்டாமலிருக்க இருவரும் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மங்கையர்க்கரசி கூடத்தின் ஒருபுறத்திலிருந்த ஸோபாவில் உட்கார்ந்திருந்தாள். குமுதம் மறுகோடியிலிருந்த மேஜையடி நாற்காலியில் உட்கார்ந்து ஒரு புஸ்தகத்தைப் பிரித்துப் பிடித்துக்கொண்டு படிக்க முயன்ருள். கண்கள் புஸ்தகத்திலே ஊன்றிய மாதிரி யிருந்தன. ஆனல் அந்தப் பக்கங்களிலிருந்த ஒரு எழுத்துக்கூட அவள் மனத்தில் பதியவில்லை. அவளது வலது கைவிரல்கள் புஸ்தகத்தின் தாள்களைக் கோதிக்கொண்டிருந்தன: அடிக்கடி முகத்தை புஸ்தகத்திலிருந்து நிமிர்த்தி எதிரில் சுவரின் மேலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே யிருந்தாள். அப்படிப் பார்த்துத் திரும்பும்போது அவளது விழிகள் மேஜை மேலிருந்த டெலிபோனின் புறம் ஓடிவிட்டுத் திரும்பின. மணி பன்னிரண்டரை என்று காட்டின கடிகாரத்தின் முட்கள். குமுதம் உள்ளக் கொந்தளிப்பை அடக்க முடியாத எல்லையை எட்டி விட்டாள். எழுந்து தாயிடம் போய் ' மணி பன்னிரண்டரை யாகிறது. இன்னுமா தீர்ப்புச் சொல்லாமலிருப்பார்கள்?" என்ருள். அவள் குரல் நடுங்கியது. ஜட்ஜு சொன்னவுடன் உங்களப்பா போனில் சொல்லு கிறேன் என்று சொல்லியிருக்கிருரே, கவலைப்படாமல் இப்படி