பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பதச் சோறு உட்காரு, தெய்வம் நம்மைக் கைவிட்டு விடாது ' என்ருள் மங்கையர்க்கரசி பரிவுடன். குமுதம் அவளருகில் உட்கார்ந்தாள். துக்கம் அவளையும் மீறிப் பொங்கியது. கண்கள் நீர் சொரியத் தொடங்கி விட்டன. மங்கையர்க்கரசி துடித்துப் போனள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, வேடிக்கையாக, உங்களப்பா சொல்லுவதுபோல அவ்வளவு தர்க்க நியாயம் பேசும் நீயும் ஒரு அஞ்ஞானிதான்; என்ன முடிவு வந்தாலும் நாம் சரியான வழியில் போக வேண் டியது. அவ்வளவுதான் நம்முடைய பொறுப்பு என்று எங்களுக்கு மட்டும்தான் உபதேசமா? அது உனக்குமில்லையா? என்ருள். குமுதம் கண்ணிரைத் துடைக்கவும் முயலாமல் ' பாபுவை நினைத்தால் அடிவயிற்றில் என்னவோ செய்கிறதம்மா. குப்பென்று நெருப்புப் பிடிப்பது போல இருக்கிறது.’’ என்று தாயின்மேல் சாய்ந்தாள். . மங்கையர்க்கரகி பதில் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டு அவள் தலையை வருடினுள். 景 용을 张 பதினைந்து வருஷங்களுக்குமுன் மகாத்மா காந்தியைத் தரிசிக்க குமுதத்தை அழைத்துக் கொண்டு போனபோது தம் மகளின் வாழ்க்கையில் இவ்வளவு பெரியதொரு புயல் அடிக்குமென்று சிவசங்கர முதலியார் நினைக்கவேயில்லை. 1934ம் வருஷத்தில் காந்தி ஹரிஜன நிதி வசூலுக்காகத் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அவர் விஜயம் செய்த ஊர்களிலெல்லாம், மக்கள் வெள்ளம்புரண்டு வருவது போலத் திரண்டு சென்று அவரைத் தரிசித்தார்கள். அந்த வேகம் அப்போது பதின்ைகு வயதுச் சிறுமியாக இருந்த குமுதத்தையும் வளைத்து இழுத்தது. தந்தையிடம், காந்தியைப் பக்கத்திலிருந்து பார்க்கும்படிக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லிக் கெஞ்சிக் கொஞ்சிள்ை. - சிவசங்கர முதலியார் அவளிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து இதை மகாத்மாவிடம் கொடுத்து உன் புத்தகம் ஒன்றில் கையெழுத்து வாங்கிக் கொள். அப்போது அவரை உன்னல் முடிந்தவரைக்கும் பார்த்து விடு' என்று சிரித்துக் கொண்டே சொல்லி அழைத்துச் சென்ருர்,