பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா 149 குமுதம் கையெழுத்து வாங்குவதற்கு ஒரு புஸ்தகம் தேடினள். பாரதி உரையெழுதிய கீதைதான் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு தந்தையும் மகளும் முன் வரிசைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். காந்தி ஹிந்தியில் பேசியதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னர். குமுதம் பாதி புரிந்தும் புரியாமலும் அதைக் கேட்டாள். நிதி வசூல் ஆரம்பமாயிற்று. யார் யாரோ என்ன வெல்லாமோ காணிக்கை செலுத்தினர்கள். குமுதம் எழுந்து அவரருகில் போய் நோட்டைக் கொடுத்துப் புஸ்தகத்தைக் காட்டி, அதில் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டாள். காந்தி அவளைக் கருணை வழியும் கண்களால் ஏற இறங்கப் பார்த்து ' என் கையெழுத்துக்கு விலை ஐந்து ரூபாய் தானென்று உனக்கு யார் சொன்னது ' என்று கேட்டார் இங்கிலீஷில்: இரண்டாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த குமுதத் திற்கு அது புரிந்தது. குளறிய இங்கிலீஷில் ' எங்களப்பாதான் சொன்னர் ' என்ருள். அதற்குமேல் கொடுக்க முடியாத ஏழைகளுக்குத்தான் அந்த விலை. உன்னைப்பார்த்தால் பணக்காரியாகத் தோன்று கிறது. இதோ கையில் வளைகள், காதில் தோடு, கழுத்தில் சங்கிலி எல்லாம் அணிந்திருக்கிருயே. இடைக்குத் துணிகூட இல்லாத ஏழை ஹரிஜனங்களுக்கு அதை யெல்லாம் நீ கொடுத்துவிடக் கூடாதா? ' என்ருர் காந்தி. குழந்தை முன்பின் யோசிக்காமல், தயங்காமல் நகைகளைக் கழற்றிள்ை. காந்தி பொக்கைவாயை நிறையத் திறந்து சிரித்துக் கொஞ்சம் பொறு; இதையெல்லாம் கழற்றி என்னிடம் கொடுத்துவிட்டு நீ வீட்டுக்குப் போய் வேறு நகைகள் போட்டுக் கொள்ளக் கூடாது. அதற்குச் சம்மதித்தால்தான் இவற்றை என்னிடம் கொடுக்கலாம்' என்ருர்: குமுதம் சம்மதம்” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னுள். - - " உன்னுடைய பெற்ருேர்கள் நீ நகை போட்டுக்கொள்ள வேண்டுமென்ருல்?’ என்ருர் காந்தி.