பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 50 பதச் சோறு உங்களுக்கு வாக்குக் கொடுத்திருப்பதைச் சொன்னல், சரி போட்டுக் கொள்ள வேண்டாமென்று சொல்லி விடுவார்கள் ' . ' நாளை உனக்குக் கலியாணமாகும் போது உனக்குக் கணவனுக வருகிறவர் சொன்னுல் ? ” கலியாணத்திற்கு முன்பே எனக்கு நகையணியா விரதம் என்பதை அவரிடம் சொல்லிவிடச் சொல்லுவேன். என் விரதத் தோடு என்னை ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறவரைத்தான் மணந்துகொள்வேன் ' என்று திடமாகப் பதிலளித்தாள் குமுதம் . காந்தி, ஒருகணம் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். இரண்டு ஜதைக் கண்களும் சந்தித்தன. குழந்தையின் உள்ளத் திலிருந்த உறுதியை, அவளது விழிகளில் கண்டு காந்தி அவள் கொடுத்த புஸ்தகத்தைப் பிரித்தார். அது கீதை யென்று கண்டவுடன் இன்னொரு முறை அவள் முகத்தைக் கவனித் தார். அவர் முகத்தில் ஒரு அபூர்வமான புன்னகை பூத்தது. புஸ்தகத்தின் முகப்புப் பக்கத்தில் மேற்கொண்ட விர தத்தை நடத்தி முடிக்க நீ எந்தத் தியாகத்திற்கும் சித்தமாக இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய மனோபலத்தை இந்த கீதை ஒன்றுதான் உனக்குக் கொடுக்கவல்லது ' என்று எழுதி அதன் கீழே எம். கே. காந்தி ' என்று கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தார். - தன் மகளுடன் அந்த மகாபுருஷன் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பெருமையில், சிவசங்கர முதலியாருக்குத் தலைகால் புரியவில்லை. அவர்கள் என்ன பேசினர்கள் என்பதைக் கூட அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. குமுதம் நகை களைக் கழற்றிக் கொடுத்ததைப் பார்த்தார். காந்தியின் பொக் கைவாய்ச் சிரிப்பைப் பார்த்தார். அவ்வளவு தான். குமுதம் திரும்பி வந்தவுடன் அவள் கையிலிருந்த புஸ்தகத்தை வாங்கி, காந்தியின் கையெழுத்திருந்த பக்கத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மூடி வைத்தார். மூன்று வருஷங்களுக்குப் பிறகுதான் அந்தச் சம்பவத்தின் பொருளும் பலாபலன்களும் அவருக்குப் புரியத் தொடங்கின. குமுதத்தின் பதினேழாவது வயதில் அவளுடைய மணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினர். - இதோ இதழவிழ்ந்து மலரப் போகிறது என்று காட்டும் குமுதமொக்கைப் போலவே யிருந்தாள் குமுதம். சாதாரண ஒற்றை வர்ணச் சேலே யுடுத்து, கொஞ்சம் அழுத்தமான நிறத் தில் ரவிக்கை யணிவாள். கூந்தலைச் சீவிச் சடை பின்னி அதில்