பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா 151 மலர் சூடி அவள் நிற்பதைப் பார்த்தால், யாரோ வனதேவதை வழி தவறி நாகரிகத்திற்குள் வந்துவிட்டது போலத் தோன்றும். அவளுடைய இயற்கை எழிலுக்கு ஏற்றபடி நகைநட்டுகள் போட்டு அலங்கரித்துப் பார்ப்பதற்கில்லையே யென்று ஏங்கிள்ை மங்கையர்க்கரசி. சிவசங்கர முதலியாருக்கும் உள்ளுர அந்த மனக்குறை யுண்டு. ஆலயத்திற்குச் சென்று ஆண்டவன் முன்னிலையின் பரிசுத்த வாழ்க்கை விரதம்பூண்டு வெளியேறுகிறவர்களே சில நிமிஷங் களில் தங்கள் விரதத்தை மறந்து விடுகிருர்கள். மனிதக் காந்தியின் முன் மேற்கொண்ட விரதம் மட்டும் நிலைத்து நிற்கு மென்று என்ன நிச்சயம் ? குமுதம்-காந்தி சந்திப்பைப் பற்றிச் சிவசங்கர முதலியார் அப்படித்தான் நினைத்திருந்தார். குழந்தை ஏதோ விளையாட்டுப் போக்கில் அவரிடம் சொல்லி விட்டாள். காலத்துடன் மனம் மாறத்தாகை அலங்கார ஆசை பிறந்துவிடும் என்று நம்பினர். ஆனல் காலத்துடன் அவள் மன உறுதி பலமடைந்ததைத்தான் கண்டார். - - காந்தியைச் சந்திக்குமுன் தனது பிராயத்திற்கேற்ற மனப் பாங்கிலிருந்தவள், மிக மிக விரைவில் உள்ளூர வளர்ந்து ஒரு பக்குவ நிலையை எய்தி விட்டதைக் கண்டார். படபடக்காமலும், சிந்தனையிலே தடுமாற்றமில்லாலும் அவள் தமக்கே எட்டாத எல்லையிலிருந்து பேசியதைக் கேட்க அவருக்கும் பெருமையாகத் தானிருந்தது: ஆனல் அவளுடைய விரதம், தந்தை யென்ற முறையில் தான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்குத் தடையாக வருவதை எண்ணும்போது அவருடைய பொறுமை தடுமாறியது; முதல் முதலாக அவர் தமது உறவினரிலேயே ஒரு மருமகனைத் தேடிப் பேச்சுத் தொடங்கியவுடனேயே தமது நிலைமையிலிருந்த சிரமத்தை உணர்ந்தார். சகஜமாகப் பிள்ளை வீட்டார், பெண்ணுக்கு நகைகள் போடுவதைப் பற்றிக் கேட்டார்கள். முதலியார் காந்தி சம்பவத்தை விளக்கிச் சொல்லி குழந்தைக்கு நான் செய்யக்கூடியதை யெல்லாம் நிலமாக சீதனம் எழுதிவைக்கப் போகிறேன்' என்ருர். பிள்ளை வீட்டாருக்குச் சப்புத் தட்டி விட்டது. அதில் ஒரு அம்மாள் தாலியும் சிறகும்கூட நகைதானே. அதையாவது கட்டிக்குவாளா இல்லையா? ' என்று ஏளனமாகக் கேட்டாள்;