பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 53 பதச் சோறு முதலியார் மனம் புண்ணுகிவிட்டது. ஆயினும், அந்த அனுபவம் அப்போதுதான் ஆரம்பித்திருக்கிறதென்பதை யுணர்ந்து பதில் சொல்லாமல் எழுந்து வந்துவிட்டர். - அதன் பின்னர் மூன்று இடங்களில் மாப்பிள்ளை தேடினர். ஒரு இடத்தில் அவருக்கே திருப்தியில்லை. இன்னொரு இடத்தில் பெண் நகை போட்டுக்கொள்ள முடியாதென்முல், அந்தத் தொகையை எங்களிடம் ரொக்கமாகக் கொடுத்துவிட வேண்டும் ' என்று நிபந்தனை போட்டார்கள். அதாவது நகை யணியாத பெண்ணைக் கட்டிக்கொள்ள உங்கள் மகனுக்கு நான் கைக்கூலி கொடுக்க வேண்டுமென்கிறீர் கள்; இல்லையா? ' என்று படபடத்துப் பேசி விட்டு வெளியேறினர். மூன்ருவது இடத்தில் பேச்சுவார்த்தை யெல்லாம் முடிந்து கடைசியாகக் குமுதத்தின் விரதவிஷயம் வெளி வந்தவுடன் 1. காந்தி கட்சிக்கும் எங்களுக்கும் ரொம்ப துரம் ' என்று அவருக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டார்கள்; இதிலேயே இரண்டு வருஷங்கள் கழிந்து விட்டன. மகளுக்குக் கலியாணமே ஆகப்போவதில்லை என்று கருதத் தொடங்கிவிட்டாள் மங்கையர்க்கரசி. - குமுதம் தான் மேலே படித்து ஏதாவது உத்தியோகம் தேடிக் கொள்ளுவதாகச் சொல்லிப் பெற்ருேரைச் சமாதானம் செய்ய முயன்ருள். ஆளுல் அவர்களுக்கு அதில் திருப்தியில்லை. ' கலியாணம் ஆகும் வரை வேண்டுமானல் படி அப்புறம் உன்னை மணந்துகொண்டவன் இஷ்டம்தான் உன்னே யாருக் காவது கட்டிக்கொடுக்காமல் எங்கள் பொறுப்புத் தீராது ' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் முதலியார், அந்த சமயத்தில்தான் சென்னையிலிருந்து ஷண்முகசுந்தரத் தின் பெற்ருேர்கள், யாத்ராமார்க்கத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். விருந்தாளிகளாக வந்தவர்கள் சம்பந்தி களாக மாறிஞர்கள். பெற்ருேர் அழைப்பின் மேல் நேரில் வந்து குமுதத்தைப் பார்த்த ஷண்முகசுந்தரம் ஒரே நொடியில் அவளை மணக்க இசைந்தான். அவள் காந்திக்குக் கொடுத்த வாக்கைக் காப் பாற்றுவதற்குத் தான் தடையாக இருப்பதில்லை என்றும் உறுதியளித்தான்.