பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா 153 குமுதத்தின் மணவாழ்க்கையில் முதல் ஆறு வருஷங்கள் மிக மிக இன்பமாகக் கழிந்தன. மணமான மூன்ரும் வருஷம் அவள் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாளுள். குழந்தைக்கு மோகன் என்று பெயர் வைத்தார்கள். எல்லோரும் அவனை பாபு என்று செல்லப்பெயரால் அழைத்தார்கள். குமுதத்தின் பதிபக்தி உள்ளூரக் கனிந்த பிரேமையிலிருந்து வளர்ந்தது. அதன் இனிமை முழுவதையும் உணர்ந்த ஷண்முக சுந்தரம் அவளே மனைவியாக அடைந்ததில் தனக்கு நிகரேயில்லை யென்று பெருமிதம் கொண்டிருந்தான். அவன் தந்தைக்குச் சென்னையில் பெரிய வியாபாரம்: மணத்திற்குப் பிறகு அவன் அதில் அதிக கவனம் செலுத்தி, இரண்டே வருஷங்களில் அதன் பொறுப்பு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்ளும் நிலைமையை அடைந்தான். அவன் தந்தை எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டார். பணத்திற்குச் சொந்தமாக ஒரு இயல்பும் கிடையாது. அது போய்ச்சேரும் ஆளைப்பொறுத்து அதற்குத் தன்மை பிறக்கிறது என்பது ஒரு கட்சி. பணம் இயல்பாகவே மனித மனத்தை நேர் வழியிலிருந்து திருப்பிக் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் சக்தி படைத்திருக்கிறது என்பது இன்னெரு கட்சி. ஷண்முகசுந்தரம் விஷயத்தில் இரண்டாவது கட்சிதான் சரி யென்று ரூபித்துவிட்டது அவனையடைந்த பணம். யுத்த கெடு பிடியில் அவனுடைய வியாபாரம் அமோகமாகப் பெருகியது. அதிலும் கணக்குக்குக் கொண்டுவராமல், கள்ளச் சந்தை லாப மாக ஏராளமாகச் சம்பாதிக்க வழிகள் தோன்றின. ஷண்முக சுந்தரம் அந்த வழிகளில் இறங்கினன். ஆரம்பத்தில் குமுதத்திற்கு அது தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை யறிந்தபோது அவள் மனம் மிகுந்த வேதனையடைந்தது. கணவனிடம் ஜாடைமாடையாகப் பேசிள்ை பலனில்லை. இதெல்லாம் என் வியாபார விஷயம். நீ தலையிடக் கூடாது ' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். அவன் அதோடு நின்றிருந்தால் நிலைமை இவ்வளவு சீர்கெட் டிருக்காது. தான் கள்ள மார்க்கெட்டில் சம்பாதித்த பணத் தைப் பயன்படுத்திக் கொள்ளப் புதிதாக ஒரு வழி கண்டு பிடித் தான். குமுதம் நகைகள் அணிய வேண்டுமென்று சொன்னன். அவள் மறுத்தபோது நீ அதையெல்லாம் போட்டுக்கொள்ளா விட்டால் என்ன ? உனக்காகவென்று நகைகள் வாங்கித்தான்