பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J. 54 பதச் சோறு தீரவேண்டும். பின்னல் சமயோசிதம் போல நான் அதைப் பணமாக மாற்றிக் கணக்குக்குக் கொண்டுவர வழிசெய்து கொள்ளுவேன்' என்ருன். குமுதம் அதற்கும் இணங்கவில்லை. அங்கிருந்துதான் அவர் கள் வாழ்க்கையில் கரகரப்புத் தட்டத் தொடங்கியது. குழந்தை மோகன் பாபுதான் கரகரப்பு, கலகமாக முற்ருமல் காப்பாற்றி வந்தான். ஆனல் இரு வெவ்வேறு திசைகளில் திரும்பிப் புறப்பட்டு விட்ட உள்ளங்கள் எத்தனை நாளைக்குத்தான் அம்மாதிரிச் செயற்கைப்பூச்சில் ஒட்டிக்கொண்டிருக்க முடியும் ! " தான் கணவன் ; என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, நான் சொல்லுகிறபடி நடக்க, செய்யக் கடமைப்பட்டவள் அவள்: என் வார்த்தையை அவள் மறுப்பதா ?’’ என்ற அகங்காரம் தோன்றி அதிவேகமாக வளர்ந்தது, ஷண்முகசுந்தரம் மனத்தில். தினசரி வாழ்க்கையில், சிறு சிறு காரியங்களில்கூட அவன் காட் டிய அந்த மைேபாவத்தைக் கண்டு குமுதம் கலங்கிள்ை. என்ன நேர்ந்தாலும் காந்திக்குக் கொடுத்த வாக்கைக் கைவிடுவதில்லை யென்ற உறுதி மாத்திரம் அதிக பல மடைந்தது. அதே நிலைமையில் இருவரும் ஒதுங்கி ஒதுங்கி ஒரு வருஷம் தள்ளிவிட்டார்கள். அந்த அசட்டுக் கசப்பு நிலையை நீடிக்க விடாமல் காப்பாற்ற இந்திய சர்க்காரின் வருமான வரி விசா ரணைக் கமிட்டி நியமன அறிவிப்பு வெளி வந்தது. யுத்த காலத் தில் கொள்ளை லாபம் அடித்துவிட்டு அதற்குரிய வருமான வரி யைச் செலுத்தாமல் ஏமாற்றியவர்களைக் கண்டு பிடிப்பதுதான் கமிட்டியின் பொறுப்பு. - அந்த அறிக்கையைப் படித்த ஷண்முகசுந்தரம் பயந்து விட்டான். குமுதத்திடம் நகைகள் வாங்கும் விஷயத்தை அதிக மாக வற்புறுத்தத் தொடங்கினன்; 'நான் கழுதை மாதிரி நகை சுமக்கச் சம்மதித்தாலும், அதிகமானல் ஐம்பதியிைரம் அல்லது ஒரு லட்சத்திற்கு நகைகள் வாங்கலாம். உங்கள் இருட்டடி லாபம் அதற்குமேல் நாலைந்து மடங்கு இருக்குமே. அதற்கென்ன செய்வீர்கள்?' என்று கேட்டுவிட்டாள் குமுதம். ஷண்முகசுந்தரம், அது என் கவலை. நான் சொல்வதை மாத்திரம் நீ செய்தால் போதும் ' என்ருன். குமுதம், அன்றுவரை நேருக்கு நேர் பதில் சொல்லி வாதாடி யவளல்ல. அன்று என்னவோ அவளுக்குப் பேசித்தான் தீர