பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா 155 வேண்டும் போலிருந்தது. அன்னிய ஆதிக்கம் ஒழிந்து நாட்டை நாமே ஆளும் உரிமை வேண்டுமென்று போராடி ளுேம். இன்னும் சில மாதங்களில் நம்முடைய சொந்த சர்க் கார் ஏற்பட இருக்கிறது. அது நடக்கப் பணம் கொடுக்க நாம் தயாராக இல்லை. உங்களைப் போன்றவர்கள் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நேரடியாகச் சொல்லிவிட லாமே இப்படிச் செய்வதற்கு ’’ என்ருள். ஷண்முகசுந்தரத்தின் அகங்காரம் அவன் மனிதத்தன் மைக்கே திரையிட்டுவிட்டது. அவனை ஆட்டிவைத்த பணம் சீறிக்கொண்டு எழுந்து அவனைத் துண்டியது. சீ. நாயே வாயை மூடு’’ என்று அவள் கன்னத்தில் அடித்துவிட்டான். அன்றுவரை அவன் குமுதத்தை அடி' என்று கூடச் சொன்னதில்லை. அதனால் அவனுடைய அந்த நடத்தை அவனேயே குலுக்கிவிட்டது. தான் செய்தது தவறுதான், மிருகத் தனம் தான் என்று உணர்ந்தான். அதுவே அவனுடைய ஆத்தி ரத்தையும் எரிச்சலையும் அதிகரிக்கக் காரணமாயிற்று. தன்னை அப்படி மிருகத்தனத்திற்குத் தாழ்த்தியது அவளுடைய தூய்மை யும், உறுதியும் தான் என்று கருதினன் அதனல் அவளைக் கண்டாலே அவன் நெஞ்சில் வெறி பிறந்தது. திடீரென்று ஒருநாள் அவனையும் குழந்தை பாபுவையும் ரயி லேற்றி, அவளுடைய பிறந்த வீட்டுக்கு அனுப்பினன். அவள் அங்கே போய் இறங்கும்போது அவள் விலாசமிட்ட கடிதமொன்று காத்திருந்தது அவளுக்காக. - 'உன் வீட்டுக்காரர் கையெழுத்து, நீ அங்கிருக்கும்போதே இங்கே எதற்காக இப்படிக் கடிதம் போட்டிருக்கிருர் என்பது விளங்காமல் திகைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அதை அவளிடம் கொடுத்தார் சிவசங்கர முதலியார். - குமுதத்திற்கு அதில் என்ன எழுதியிருக்குமென்பது ஒருவாறு தெரிந்துவிட்டது. பிரித்துப் பார்த்தாள். ! நீ என் மனைவி. என் உத்தரவின்படி நடக்கக் கடமைப் பட்டவள் என்பதை நிச்சயமாக உணர்ந்து அதற்குச் சித்தமாக இருப்பதாகக் கடிதம் எழுதிவிட்டு இங்கே திரும்பிவந்தால் போதும் ' என்று எழுதியிருந்தான் ஷண்முகசுந்தரம். குமுதம் தன் பெற்றேரிடம் நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொன்னுள், 'மணத்தின் போது நீ நகை போட்டுக்கொள்ள மாட்டாய் என்பது தெரிந்துதானே அதற்கு இசைந்தான்? இன்று இப்படி வாக்கு மீறுவதுதான் அழகா? அதைக் காரணம் காட்டி