பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பதச் சோறு உன்னை வாழாவெட்டியாக்க முயலுவது சரிதான என்று கேட்டு எழுதுகிறேன். இல்லாவிட்டால் நானே நேரில் போய் கேட் கிறேன்’ என்று குதித்தார் முதலியார். குமுதம் அவரைச் சமாதானம் செய்து 'இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அவருடைய பிடிவாதம் தான் வலுக்கும் அப்பா. கொஞ்சம் பொறுமையாக இருந்தால் தானக மனம் இளகிவிடுவார். அவர் சுபாவம் எனக்கு நன்ருகத் தெரியும்’ என்ருள். ஆளுல் அவள் ஷண்முகசுந்தரத்தின் சுபாவத்தைச் சரியாகத் தெரிந்துகொள்ளவேயில்லை யென்பதைத்தான் காலம் காட்டியது. ஒரு வருஷம் வரை அவனிடமிருந்து கடிதமே வரவில்லை. குமுதம் எழுதிய கடிதங்களுக்கும் பதிவில்லை. அவள் பிறந்த வீட்டுக்கு வந்து சரியாக ஒரு வருஷம் ஆன அன்று காலையில் அவள் தந்தை சிவசங்கர முதலியாருக்குச் சென்னை ஹைகோர்ட்டில் இருந்து ஒரு சம்மன் வந்தது. சென்னை ஷண்முகசுந்தர முதலியார் தன் மகனைத் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டுமென்று கோர்ட்டில் மனுச் செய்துகொண்டிருப்பதாகவும், தற்சமயம் குழந்தையை வைத் திருக்கும் குமுதம் பையனுடன் கோர்ட்டில் ஆஜராகித் தன் கட்சியைத் தெரிவிக்கவேண்டுமென்றும் அதில் உத்தரவிடப் பட்டிருந்தது. அதைப்படித்த சிவசங்கர முதலியார் மனம் கொதித்து விட்டது. "அயோக்கியப் பயல், வேண்டுமென்று வம்பு செய்வதற் காகவே இப்படிச் செய்திருக்கிருன். அவனை விடுவதில்லை, ஒருகை பார்த்து விடுகிறேன்’ என்று இரைச்சல் போட்டார்: குமுதம் எதற்காக அப்பா இப்படிப் பேசுகிறீர்கள்? அவர் மகனை அவர் கேட்டால் நாம் ஒப்படைத்து விடவேண்டியவர்கள் தானே' என்ருள்: "நீ பேசாமலிரு. வாயா வார்த்தையாகக் கேட்டால் போதா தோ ? திடீரென்று கோர்ட்டுக்குப் போவானேன்? என்னை யாரென்று நினைத்திருக்கிருன்? நான் போய் நல்ல வக்கீல் ஒருவரைக் கலந்து பேசுகிறேன். இவனைச் சும்மாவிடப் போவ தில்லை. குழந்தைக்கும் உனக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்று எதிர் வழக்குப் போடுகிறேன்' என்று சீறிஞர். ஆனல் அவர் சொன்னபடி எதிர்வழக்குப் போடவில்லை. குமுதம் அதற்கு இணங்கவே முடியாதென்று சொல்லிவிட்டாள் குழந்தையை ஒப்படைக்கும் விஷயத்தில் மாத்திரம் அவள் தந்தை