பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. எஸ். ராமையா 157 யின் போக்கை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவளுடைய தாய்மை உணர்ச்சி தீவிர வேகத்துடன் எழுந்து குழந்தையைத் தன்னிடம் இருத்திக்கொள்ளத் தூண்டியது, குமுதமே நேரில் கோர்ட்டுக்குப் போய்த் தன் கட்சியைச் சொல்லவேண்டுமென்று விரும்பினர் முதலியார். என்ன காரணத் தில்ை இந்த விபரீத வழக்கு வந்திருக்கிறதென்பதை விளக்கிச் சொன்னல், சுலபமாக ஜயித்துக்கொண்டு வந்து விடலாமென்று' வக்கீலும் யோசனை சொன்னர். குமுதம் அதற்கு இசையவில்லை. தன் பெயரால் ஒரு வாக்குமூலம் பதிவு செய்வதற்கும், அதில் தான் குழந்தையை எவ்விதக் குறைவுமின்றி வளர்க்கமுடியும், அது தன் தாயுடன் வளர்வதால் எவ்விதக் கோளாறும் நேர்ந்து விடாது என்று சொல்வதற்கும் மாத்திரம் அனுமதியளித்தாள். இந்த வழக்கைப்பற்றிய விஷயங்களைக் குழந்தையிடம் யாரும் பேசக்கூடாது. அவனெதிரில் பெரியவர்கள் அதைப் பற்றிக் குறிப்பிடவும் கூடாது என்று கண்டிப்பான நிபந்தனையும் விதித்தாள். பெரியவர்கள் குரோதத்தில் காட்டும் ஆபாச மனப்பான்மை குழந்தைக்கும் படிந்துவிடக் கூடாது, என்று தன் தாய்க்கு விளக்கிச் சொன்னுள், வழக்கு இழுத்துக்கொண்டே போயிற்று. ஷண்முக சுந்தரம் வேண்டுமென்றே வளரவிட்டான். குமுதத்தின் உள்ளத்தை வதைத்து அவளைப் பணியவைத்துவிட வேண்டுமென்ற பேய் வெறி அவனை ஆட்டிவைத்துக் கொண்டிருந்தது. அதனலேயே வழக்கை இழுக்கடித்தான்) சிவசங்கர முதலியார் சென்னையிலேயே ஒரு தனி விடாக்ப் பிடித்துக் குடும்பத்துடன் வசிக்க வந்துவிட்டார். & တို႕ * அன்றுதான் தீர்ப்பு. சிவசங்கர முதலியார் பாபுவுடன் கோர்ட்டுக்குப் போயிருந்தார். வக்கீல் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பெற்றேர்கள் எவ்வளவோ வற்புறுத்தி மன்ருடி யும், குமுதம் தன் கட்சி சம்பந்தமாகப் பல தகவல்களைக் கோர்ட்டில் வெளியிட அனுமதியளிக்கவேயில்லை. அதேைலயே அன்று தீர்ப்பு அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கப்போகிறது என்று மற்ற எல்லோரும் நம்பினர்கள்: ஆனல் குமுதம் மட்டும் தன் கட்சியிலிருந்த சத்தியமும் தாய் உரிமையும்தான் ஜயிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தாள். அந்த நம்பிக்கையையும் மீறி அவள் உள்ளம் பதைத்தது: மற்றவர்கள் எல்லோரும் கருதுவதுதான் சரியாக இருந்து