பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பதச் சோறு விடுமோ என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து அவளை வதைத் தது. தான் பதியையும் இழந்து, பாபுவையும் இழந்துவிட நேர்ந்தால் அப்புறம் வாழ்க்கை சர்வ சூன்யமாகிவிடுமே என்ற வண்ணம் எழுந்து எழுந்து அவளைத் துடிக்க வைத்தது. தாயின் மேல் சாய்ந்து அவள் மனத்திற்குள்ளாகவே தியானம் செய்தாள். கடிகாரம் ஒரு மணியடித்தது. குமுதம் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். டெலிபோன் மணியும் கினுகினுவென்று ஒலித்தது. அவசரமாக எழுந்துபோய் வாங்கி யுறுப்பைக் கையிலெடுத்தாள். அவள் கை நடுங்கியது. உறுப்பைக் காதரு கில் கொண்டுபோகத் தயங்கினுள். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு உறுப்பில், சிவ சங்கர முதலியார் வீடு. யார் வேண்டும்? ' என்ருள்,

  • நீதான் வேண்டும் ' என்று பதில் வந்தது மறுபக்கத்தி லிருந்து.

நீங்களா? ' என்ருள் குமுதம். எழுந்து அவளிடம் வரப்புறப்பட்ட மங்கையர்க்கரசி அவள் குரலைக் கேட்டவுடன் தயங்கி நின்ருள், மறுபக்கத்திலிருந்து ஷண்முகசுந்தரம் பேசினன். ' குமுதம், உனக்குக் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி நடக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லி விடு. எல்லாம் சரியாகிவிடும்' என்ரு:ன். குமுதம் பணிவுடன் ' இதுவரை உங்கள் சொல்லை மீற வேண்டுமென்று நான் நினைத்தது கூட இல்லை என்ருள். ' அதனுல் தான் நகைகள் வாங்கக்கூடச் சம்மதிக்க மாட்டே னென்கிருயோ’’ என்று ஏளனமாய்க் கேட்டான் ஷண்முக சுந்தரம், 'அதற்கு நான் இசைந்தால் என் வாக்கைமாத்திரமல்ல, உங்கள் வாக்கையும் காப்பாற்ருத பாவம் சேரும். உங்களுக்கு நான் என்ன சொல்வதற்கிருக்கிறது.’’ என்ருள். ஷண்முகசுந்தரம் ஒகோ என்ன அரிச்சந்திரளுக்கிவிட வேண்டுமென்றுதான் கோர்ட்டில்கூட எதிர்வழக்காடுகிருயா ? சரிதான். தீர்ப்புச் சொல்லியாகிவிட்டது. பாபு என்னுடன் வந்துவிடுவான். இனிமேல் அவனைத் தூரத்திலிருந்து கூடப் பார்க்க முடியாது நீ. அந்த ஆசை ஏதாவது இருந்தால் இப் போதே அதை விட்டுவிடு' என்ருன்,