பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பதச் சோறு கோர்ட்டுச் சேவகன் ஷ்! சைலன்ஸ்னு அதட்டினன். ஜட்ஜூ ரொம்ப நல்லவரு அம்மா. 'என்ன வேணும் தம்பி” ன்னு கேட்டாரு. "எங்கம்மா காந்திக் கட்சி. எங்கப்பா அதுக்கு எதிர்க்கட்சி. அதுதான் அவங்களுக்குள்ளே சண்டை. நானும் காந்தி கட்சி யிலேதான் இருக்கப் போகிறேன்னேன்.' எல்லாரும் திருதிருன்னு முழிச்சாங்க. அப்பா வக்கீல் எழுந்து நின்னு இங்கிலீஷிலே என்னவோ படபடான்னரு. ஜட்ஜூ அவர் சொன்னதைக் கேக்கவேயில்லே. என்ன நடுவிலே ஒரு பெட்டிமாதிரி இருக்குதே அங்கே வந்து நிக்கச் சொன்னரு. நான் பயப்படாமே போயி நின்னேன்.' தம்பி! உனக்கு எது நல்லது இல்லேன்னு தெரிஞ்சுக்கிற வயசு வரல்லே இன்னம். நீ குழந்தை, ஆகையினலே சட்டப்படி உனக்கு எது நன்மையோ அப்படித் தீர்ப்புச் செய்திருக்கோம்' இரு. " நான், எங்கப்பா என்னைக் காட்டிலும் கொழந்தையா இருக்காருங்களேன்னேன். அது தப்பா அம்மா? பின்னே அங்கே யிருந்தவங்கள்ளாம் எதுக்காக அப்படிச் சிரிக்கணும் ? ஜட்ஜு உனக்கு யாருகிட்ட இருக்கப் பிரியம்னு கேட்டாரு. அம்மா கூடத் தான்னேன். தீர்ப்பை மாத்திப் போட்டாரு அம்மா' என்ருன். குமுதம் வியப்பில் விரிந்த தனது பெரிய கண்களால் அவன் முகத்தைத் தாகத்துடன் பருகிக் கொண்டே அதையெல்லாம் கேட்டான். அவன் முகத்தை இரு கைகளாலும் பற்றி இழுத்து முகம் முழுவதும் முத்த மழை பெய்து தள்ளிவிட்டாள்: கூடத்தின் வெளிவாசலருகில் நீர்துளித்த கண்களுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்த சிவசங்கர முதலியார், ' குமுதம்! இந்த தேசத்திலிருந்து வெள்ளேக்காரன் வெளியேறியதுடன், காந்தி மேற்கொண்டு வந்தவேலை முடிந்துவிட்டதென்று எல்லா ரும் நினைக்கிருர்கள். அது தவறு. காந்தி சக்தியின் வேலை இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது என்பாயே. அது அப்படி யே சரியென்பது இன்றுதான் எனக்கு விளங்குகிறது. வாசலில் ஷண்முகசுந்தரம் வந்து காத்திருக்கிருன். நீ உத்தரவு கொடுத் தால் உள்ளே வருவான்' என்ருர். குமுதம் பாபுவைக் கொஞ்சம் விசையுடனேயே ஒதுக்கித் தள்ளிவிட்டு எழுந்து வாசல்புறம் ஒடினுள்.