பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அகிலன்' 17 சகோதரர் அன்ருே? தொலைவில் தெரிந்த வெள்ளிப் பனிமலையின் பளிங்குச் சிகரங்கள் பகைவர்களைப் பயமுறுத்தும் ஈட்டி முனைகளைப் போலக் காலை வெயிலில் பளபளத்தன. சிகரங்களின் வாயிலாக ஊடுருவிப் பாய்ந்த இளங்கதிர் இன்னும் அந்த மலைக் காட்டில் நுழைய வில்லை; அடிவாரத்தின் மடியில் அடர்த்தியான குளிர்; மங்க லான இருள். நெடியதொரு மலைப் பாம்பு போல், ஒரு குறுகலான ஒற்றை யடிப் பாதை வளைந்து மேலே சென்றது. பாதையின் இரு புறங் களிலும் நெடிதுயர்ந்த மரங்கள். அடிக்கடி சின்னஞ்சிறு மலை யருவிகள் குறுக்கிட்டன. பனிப்பாளங்கள் நொறுங்கி நீரில் மிதந்ததால், அருவியில் வைத்த காலை மரத்துப்போன மரக் கட்டையாகத்தான் வெளியில் எடுக்க முடியும். மரக்கிளைகளி லும் இலைகளிலும் படிந்த வெண்பனி மட்டும் சொட்டுச் சொட் டாக உருகி உதிரத் தொடங்கியது. - பனியும், பயங்கரமும், இடர்ப்பாடும் நிறைந்த அந்த மேட்டுப் பாதையில் இருபது போர்வீரர்கள் ஒருவர்பின் ஒருவ ராக நடந்து சென்றனர். அவர்களது ஒழுங்கான காலடி ஒசை யைத் தவிர, மற்ற எந்த ஒலியும் அங்கு எழவில்லை. ஒசையில் ஏதாவது நேரும்போது மட்டிலும், முன்னுல் சென்ற தலைவன் குமார், தாளம் தவறிப் போடுபவனைப் பார்க்கும் பாடகனைப் போல் திரும்பிப் பார்ப்பான்-பிறகு ஓசை தவறுவதில்லை. ' லெப்ட் ... ரைட்... சரக்... சரக் ... சரக் ... சரக் ... ! ? இது அவர்களுக்கு இரண்டாவது நாள் நடை. கம்பளிக் குல்லாய்களையும் அங்கிகளையும் தாண்டி வந்து எலும்புக் குருத் &rr¬-11