பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163. சகோதரர் அன்ருே ? தைச் சுண்டி இழுத்தது அந்த குளிர். முதல் நாள் இரவை எப்படியோ ஒரு கூடாரத்துக்குள் நெருப்பு மூட்டிக் கழித்து, தங்கள் எலும்புகளை ஒரளவு உலர்த்திக் கொண்டு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தார்கள். வேவு பார்ப்பதற்காக முன்னுல் சென்றுகொண்டிருந்த ரோந்துப் படை இது. இதை அடுத்து இதேபோல் ராஜ்பகதூர் என்ற பாஞ்சாலத்து இளைஞனின் தலைமையில் மற்ருெரு சிறு படையும் வந்துகொண்டிருந்தது. அதற்கும் பின்னல் வந்த படைதான், நூறு பேர்களடங்கிய பயனிர் படை. காடுகளை வெட்டிச் செப்பனிட்டுப் பாதைகளை ஒமுங்காய்ச் சமைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அதை அடுத்தாற் போல்தான் அவர்களது தாற்காலிக ராணுவ முகாம் இருந்தது. அங்கிருந்த வர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், மொத்தம் முந்நூறு பேர் தேறுவார்கள். போக்குவரத்துச் சாலைகளில்லாத மலைக் காட்டுப் பிரதேசம் அது வீரர்கள், தளவாடங்கள், சப்ளைகள் முதலிய எல்லாவற் றையும் அங்கு ஹெலிகாப்டர் விமானம் மூலம் கொண்டு வந்து இறக்கித்தான், அந்த ராணுவ முகாமையே ஏற்படுத்தி யிருந்தார்கள் - சீனர்களின் நயவஞ்சகத்தனமான படையெடுப் புக்கு ஆளாகியிருந்த வடகிழக்கு எல்லைப் பிரதேசம் அது. சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந் தான். குமாரின் தலைமையில் வந்த வீரர்களும் மலை உச்சியை நெருங்கினர்கள். சூரியனின் ஒளி அங்கு நிலவொளி போலத் தான் குளிர்ந்திருந்தது. வெளிச்சமுண்டு; வெம்மையில்லை; மலை முகட்டைத் தாண்டிச் செல்வதற்கு அவர்களுக்கு உத்தரவு இல்லை. ஆகவே, இயற்கையாக அரண் போல் அமைந்த ஒரு பாறைத் தொடரின் மறைவில் தன் வீரர்களை உண்டு களைப் பாறச் செய்தான் குமார். ரொட்டித் துண்டு நன்ருக இறுகிப் போயிருந்தது. அதை மென்று, விழுங்கிவிட்டு குளிரை விரட்டு வதற்கு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். தாங்கள் வந்து சேர்ந்தது பற்றியும், மலே முகட்டை அடுத்த பள்ளத்தாக்கில் பகைவரின் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை என்பது பற்றி யும் பின்னல் வரும் ராஜ்பகதூருக்குச் செய்தி அறிவித்தான். தலைமை நிலையத்தை சிக்னல் கூப்பிட்டபோது அங்கிருந்து பதில் இல்லை. அங்குள்ள இயந்திரம் பழுதாகிவிட்டது போலும்! குமார் ஒரு பாறையின் பின்பு நின்றுகொண்டு, தொலை நோக்கிக் கண்ணுடியால் பள்ளத்தாக்கு முழுவதையும் நன்ருக ஊடுருவிப்பார்த்தான். நடுத்தரமான உயரம்: வைரம் பாய்ந்த ஒல்லியான உடற்கட்டு : முறுக்கு மீசை கறுப்பு நிறம்.