பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி தெய்வயானை ன்ெனுடைய நண்பர் வெற்றிலைப் பாக்குக்கடை ஒமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். மது விலக்கு இயக்கத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. ' இருக்கட்டும், நீங்கள் ஒரு காலத்தில் சாராயக்கடை குத்தகை எடுத்திருந்தீர்களாமே ? அதை எப்படி விட்டீர்கள்? உத்தரமேரூரை விட்டுச் சென்னைப் பட்டணத்துக்கு ஏன் வந்தீர் கள் ? ’’ என்று நண்பரைக் கேட்டேன். ' அது பெரிய கதை !' என்ருர் முதலியார்.

  • பாதகமில்லை, சொல்லுங்கள் ' என்றேன். ஒமக்குட்டி முதலியார் சொல்லத் தொடங்கினர் :

நாங்கள் ஜாதியில் நெசவுக்காரர்கள்; ஆலுைம் எங்கள் குடும் பத்தில் மட்டும் இரண்டு தலைமுறையாய் நெசவுத்தொழில் செய் வது கிடையாது. எங்களுடைய பாட்டனர் எங்கள் ஊரிலேயே பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால் என் தகப்பனர் காலத் தில் சொத்தெல்லாம் பல வழிகளில் அழிந்துவிட்டது. என்னையும் என் தாயாரையும் ஏழைகளாய் விட்டுத் தந்தை இறந்து போனர். அப்பொழுது எனக்கு மூன்றே வயது. கடன்காரர்கள் எங்கள் சொத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு விட்டார்களாம், என் தாயைப் பெற்ற பாட்டனர் ஒருவர் இருந்தார். அவர் அப்போது எங்களுடன் வந்து வசிக்கத் தொடங்கினர். அவர் கிழவர்; வேலை செய்யத் தள்ளாதவர். ஆனால் நல்ல கெட்டிக்கா ரர். எங்களுக்கு மிஞ்சிய சொற்ப நிலத்தின் சாகுபடிக்கு வேண்டிய ஏற்பாடு செய்து குடும்ப காரியங்களைச் சீராக நடத்தி வந்தார். நான் தினந்தோறும் பகலில் எங்கள் மாடுகளை ஒட்டிச் சென்று வருவேன். மாலையில் வீட்டுக்கு வந்து மாடுகளைக் கட்டி விட்டுப்