பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலன் I 63 சீனர்களுக்குச் சாதகமான நில அமைப்பு அவர்களுடைய எல்லேயில் இருக்கிறது. பாதை அமைத்துக்கொண்டு வாகனங் களில் வந்து குவிந்து விடலாம்-அதை நமக்குப் பாதகமாகப் பயன் படுத்திவிட்டார்கள், துரோகிகள் 1’ என்ருன் குமார், அருகில் நின்ற மராத்திய வீரனிடம். அவர்களுடைய கொரில்லாப் பயிற்சி இந்த மலைக் காடு கள் வரையில்தான் எடுபடும். சமவெளிக்கு வந்தால் நாம் புதை குழி வெட்டி விடலாம் ' என்ருன் மராத்தியன். தொலை நோக்கியால் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்த குமார் சட்டென்று பேச்சை நிறுத்தி, ஒரு திசையில் சுட்டிக் காட்டினன். தொலைநோக்கியை மற்றவனிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னன். ' ஆமாம் : பெரிய கூட்டம் !" என்ருன் மராத்தியன். இலை தழைகளை அள்ளிப்போட்டு மறைத்துக்கொண்டு வருகி ருர்கள் வாகனங்கள் ஏதுமில்லை. கோவேறு கழுதைகளில் சப்ளை வருகிறது. ’’ இரும்புச் சிலையின் முகமாக மாறியது குமாருக்கு. சட் டென்று அதை வாங்கிப் பார்த்துவிட்டு, மீண்டும் தலைமை நிலையத்தோடு கம்பியில்லாத் தந்தியில் தொடர்புகொள்ன முயன்ருன்; முடியவில்லை. ' சுமார் ஆயிரம் பேர் இருப்பார்கள்; இரண்டு மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிருர்கள் ! ' என்ருன். இருப்பதோ இருபதுபேர்; வருவதோ ஆயிரம்... ! குமார் சிறிது நேரம் யோசித்தான். பிறகு மள மளவென்று தனக்குப் பின்னல் வந்த ராஜ்பகதூருக்குச் செய்தி அனுப்பினன். ராஜ்பகதூர் !... ஆயிரம் சீனர்கள்!... வாகனங்களில்லை; இரண்டு மைல் தொலைவில் வருகிருர்கள்...உச்சிக்கு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்....தலைமை நிலையத்திற்குத் தொடர்புமில்லை ... நாமே முடிவு செய்ய வேண்டியதுதான்... என்ன சொல்லுகிருய்?" ஒரு மைல் தொலைவிலிருந்து செய்தியைக் கேட்ட ராஜ் பகதூரின் நெடிய உருவம் ஒரு கணம் திடுக்கிட்டு விட்டது. 'நீ என்ன சொல்கிருய்?...முகாமில் உள்ள எல்லோரை யும் சேர்த்தாலே நாம் மூன்றில் ஒரு பங்குதான் தேறுவோம்! " என்ருன் ராஜ்பகதூர்.