பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சகோதரர் அன்ருே? ' இருந்தால் என்ன ?...நாங்கள் இங்கே வாய்ப்பாக மறைந்து முடிந்தவரை தீர்த்துக் கட்டுகிருேம். நூறு பேர்களையாவது சரிக்கட்டி விட்டு நாங்களும் செத்துத் தொலைகிருேம். சுமார் ஒரு மணி நேரம் எங்களால் அவர்களே எங்கேஜ் செய்ய முடியும். அதற்குள் நீ பின்வாங்கிப் பயனீர் படையோடு சேர்ந்துகொள். கட்டிய பாலத்துக்குச் சரியான நேரத்தில் வேட்டு வைத்தால் அதில் பலர் ஒழிந்து போவார்கள். நீங்கள் எல்லோரும் காட்டுக்குள் மறைந்துகொண்டு பகைவர்களைச் சிதற அடிக்கலாம். என்ன சொல்லுகிருய் ?- பயனிர் படைக் குச் செய்தி அனுப்பிவிட்டுத் திரும்பிப் போ ! ’’

  • நீ சொல்லியது அவ்வளவும் சரி. நான் அப்படியே செய்தி அனுப்புகிறேன்-ஆளுல் ஒரு விஷயத்தில் நீ முட்டாள் ! இருபது பேர்களே வைத்துக்கொண்டு நீ எவ்வளவு நேரம் எத்தனை பேர்களைச் சமாளிக்க முடியும் ?

எங்களது எண்ணிக்கை முதலில் அவர்களுக்குத் தெரியப் போவதில்லை... ’’ ஏ முட்டாள் ! நீ உன் வாயை மூடு ! நான் வரத்தான் போகிறேன். ' நீ முட்டாள் மட்டுமல்ல ; சண்டைக்காரனும்கூட, நம் முடைய பழைய சண்டையைப் புதுப்பிக்க இதுவா நேரம் ? ... ராஜ்பகதூர் ’’

நான் அங்கே வந்துகொண்டிருக்கிறேன் !... நம்முடைய உத்தியோகம் ஒன்ருக இருந்தாலும், நீ என்னைவிட சீனியர் ; உத்தரவு கொடு!... உத்தரவு கொடு ! '

சரி, வந்து தொலை! ' என்று கூறிவிட்டுத் தனக்குள் சிரித் துக்கொண்டான் குமார். சண்டைக்காரகை இருந்தாலும், ராணுவக் கட்டுப்பாட்டை மீருமல் தன்னிடம் உத்தரவு கேட்ட தில் அவனுக்கு மகிழ்ச்சி. தூரத்திலிருந்தே இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர், பொல்லாத மதராஸி என்றும், முரட்டுப் பஞ்சாபி ' என் றும் பெருமையோடு கூறி நகைத்துக் கொண்டார்கள். மலை உச்சியிலிருந்த குமாருடன் இப்போது ராஜ்பகதூரும் வந்து சேர்ந்துகொண்டான். இருபது பேர்களாக இருந்தவர்கள், நாற்பது பேர்களானர்கள். எதிர்ப்பக்கத்திலிருந்து பொங்கி எழும் கடல்அலைபோல் சீனப்படை முன்னேறிக் கொண்டிருந் தது. மரணம்என்கிற முடிவுக்குத் தீர்மானமாக வந் துவிட்டு அதைக் கம்பீரமாக ஏற்றுக்கொள்ளத் துணிந்த இந்த நாற்பது