பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலன் I 65 பேர்களும், ஆளுக்குப் பத்துப் பகைவர்கள் வீதமாவது தீர்த்து விட்டுத்தான் மடியவேண்டுமென்று உறுதி பூண்டனர், நெருங்கிக்கொண்டிருந்தனர் பகைவர்கள். ' ராஜ்பகதூர், நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்' என்று அவனிடம் திட்டங்களை விளக்கினுன் குமார். " நாம் செய்யவேண்டிய காரியங்கள் மூன்று : ஒன்று, நமது எண் னிக்கை தெரிந்துவிடாதபடி திடீர்த்தாக்குதல் நடத்தி அவர் களைக் கலக்கிவிடவேண்டும்; பெரும்படை இங்கே இருப்பதாக அவர்களை நினைக்கச்செய்து உறுதியைக் குலைக்கவேண்டும்: இரண்டு, தாக்குதலின் மூர்க்கத்தனம் அவர்களுக்கு அதிகச் சேதத்தையும், தாமதத்தையும் தரவேண்டும். மூன்று, நான் முன்னின்று போரை நடத்துகிறேன். நீ செய்திகளை வேகமாக அனுப்பிக்கொண்டே இரு - இன்றைய போரில் நம்மை மீறிப் போனலும், அடுத்த இடத்தில் இவர்கள் தோற்றுத் திரும்ப வேண்டும் ! துப்பாக்கி முனைக்கெதிரே குமார் நின்றுகொண்டு, செய்திப் பொறுப்பைத் தன்னிடம் விட்டு விட்டானே என்று ராஜ்பகதுர ருக்குச் சிறிது வருத்தம். என்ருலும், செய்திப் பொறுப்பும் மிக முக்கியமானது என்பதால் அவன் முணுமுணுக்கவில்லை. குமாரை விட உயரத்திலும் பருமனிலும் எவ்வளவோ பெரியவன் ராஜ் பகதூர்; வயதில்மட்டும் இளையவன். நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் பொருமிக்கொண்டு வந்தது செஞ்சீனரது மஞ்சள் நிறப் படை. பாரதவீரர்கள் கண்ணிமைக்காமல், மூச்சுக்காற்றைக் கட்டுப் படுத்திக்கொண்டு, துப்பாக்கி விசைகளின்மீது விரல்களை வைத்த வண்ணம் ஒவ்வொரு விநாடியும் தங்கள் தலைவனின் ஆணைக் குக் காத்திருந்தார்கள்.- ஆயிற்று, மிக மிக நெருக்கத்தில் வந்து விட்டார்கள் பகைவர்கள். டுtல்’ என்று ஒரே ஒரு குண்டு சீனர்களின் பக்கத்திலிருந்து வெடித்து ஒரு இந்தியவீரனின் தலையை ஒட்டிப் பறந்தது. வீரர்கள் அனைவரும் ஆவேசத்துடன் குமாரைத் திரும்பிப் பார்த்தார்கள். தலைவன் ஏன் இன்னும் தாமதம் செய்கிருன்? ' 'முட்டாள் !......முட்டாள்......நீ எந்த உலகத்திலிருக்கி ருய்?' என்று குமாரின் காதருகில் வந்து கத்தினன் ராஜ்பகதூர். முதலில் குமாரைச் சுட்டுத் தள்ளிவிட்டு, மறுவேலே பார்க்க வேண்டும்போலிருந்தது அவனுக்கு.