பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சகோதரர் அன்ருே ? "ஆத்திரப்படாதே ராஜ் சந்தேகத்தின் பேரில் அவர்கள் சுட்டுப்பார்க்கிருர்கள். இன்னும் அருகில் அவர்கள் நெருங்கி விட்டால், நம்முடைய ஒவ்வொரு குண்டுக்கும் ஒருவன் பலி யாவானில்லையா ? -குமாரின் சமயோசித புத்தி அவனை வியக்க வைத்தது. நன்முக நெருங்கிவிட்டது கூட்டம். குமார் சைகைசெய்து விட்டு, தன்னுடைய துப்பாக்கி விசையையும் தட்டிவிட்டான். இயந்திரச் சுழல் துப்பாக்கிகள் அந்த மலைக்கூட்டமும் கானகமும் அதிர முழக்கம் செய்தன. பனிமல்ை கிடுகிடுத்தது; கானகம் கதறியது; வெள்ளிப்பனி செவ்விரத்த வெள்ளமாய் உருகிப் புரண்டோடியது ; மரணஒலங் கள் மனித இதயங்களை உலுக்கி எடுத்தன. எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து பதறிய பகை வர்கள் தங்களில் முற்பகுதி வீரர்களைக் கால்மணிப் பொழுதுக் குள் இழந்தனர். என்ருலும், அவர்கள் தங்கள் இழப்பைப் பற்றிப் பொருட்படுத்தியவர்களாகவே தெரியவில்லை. மூர்க்கத் தனத்தோடு மேலும் மேலும் படைகள் முன்னணிக்குவரத் தொடங்கின. பாரத வீரர்களிலும் பத்துப்பேர்களுக்கு மேல், தங்கள் கடமையை நிறைவேற்றிய பெருமையோடு வீரசுவர்க்கம் புகுந்தனர். பாரத வீரர்களின் எண்ணிக்கையும் தெரிந்துவிட்டது அவர் களுக்கு-மலைபோன்ற மனிதப் பேரல்ை ஒன்று ஆர்ப்பரித்துப் பொங்கி வந்தது. - 'கடைசிவீரன் உள்ளவரையில், அல்லது கடைசிக் குண்டு உள்ளவரையில் சுட்டுத்தள்ளுங்கள் 1’ என்று கத்தினன் குமார்; அதுவரையில் செய்திகளைப் பரபரப்போடு அனுப்பிக் கொண்டிருந்த ராஜ்பகதூர், செய்திப் பெட்டியும் துப்பாக்கியுமா கக் குமாரின் அருகில்வந்து தானும் சுடத்தொடங்கினன். ஒருகுண்டு குமாரின் தோளில்பாய்ந்து அவனைக் கீழே தள்ளி யது. மற்ருெருகுண்டு ராஜ்பகதூரின் செய்திப் பெட்டியைச் சுக்குநூருகச் சிதற அடித்தது. ராஜ்பகதூர் பாரதப்பகுதியின் படுகளத்தைத் திரும்பிப் பார்த்தான். குமாரைத்தவிர அனைவருமே விண்ணுலகெய்தி விட் டனர். குமார் மட்டிலும் குற்றுயிராய்க் கிடந்தான். ராஜ்பகதூருக்கு வேருென்றும் தோன்றவில்லை. பகைவர் களின் கண்களுக்குப்படாமல், அவர்கள் நெருங்குவதற்குள், பர