பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலன் 167 பரவென்று குமாரை இழுத்துக்கொண்டு ஒருபாறையின் மறை வுக்கு ஓடிவந்தான். அங்கும் அவன் நிற்கவில்லை. குமாரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, வெறிபிடித்தவன்போல் மேலும் ஒடினன். கால்வழுக்கியது, மளமளவென்று இருவரும் ஒருவரையொரு வர் பற்றிக் கொண்டபடியே மலைச்சரிவில் புரண்டார்கள். ராஜ் பகது.ாருக்கு நினைவு வந்தபோது, மலைப்புல் நிறைந்த ஒரு புதருக் குள் இருவரும் ஒன்ருய்க்கிடப்பது தெரிந்தது. குமாரின் மூக்கரு கில் கையைவைத்துப் பார்த்தான் வெப்பமான மூச்சுக்காற்று வந்துகொண்டிருந்தது. . மாலை மயங்கும்நேரம். தொலைநோக்கிக் கண்ணுடி உடை யாமல் இருந்ததால் மலைப்பாதையை உற்றுப் பார்த்தான்; நண் பகலில் படைகளுடன்சென்ற சீனர்கள், பின்னணியிலிருந்த பாரதப் படையினரிடம் எஞ்சியிருந்தவர்களில் பாதிப்பேரைப்பறி கொடுத்துவிட்டு, சோர்வும் களைப்புமாக மலையேறிக்கொண் டிருந்தார்கள். பெருமையோடு குமாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு, ' குமார், நம்முடைய இன்றையத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டது என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினன் ராஜ் பகதூர். குமாரின் விழிகள் திறந்துகொண்டன. அவன் புன்னகை பூத்தான். நல்ல செய்தியைக் கேட்டுவிட்டேன் இனி நிம்மதியாக என்னைச் சுட்டுத்தள்ளிச் சாகவிட்டு, நீ பத்திரமாகத் திரும்பிப் போ!' என்று மெலிந்தகுரலில் கூறினன் குமார்: என்ன ! உன்னைச் சுடவேண்டுமா ? ' முட்டாள் 1-இது போர்க்களம் ! எனக்கு உதவிசெய்ய விரும்பினால் சுட்டுத்தள்ளு !...முடியாவிட்டால் நீ மட்டுமாவது இங்கிருந்து போய்த்தொலை 1:

  • நீதான் முட்டாள்; உன் மூளைதான் குழம்பியிருக்கிறது ! நீ கட்டாயம் பிழைத்துக் கொள்வாய். '

சண்டை போடாதே ! உன் முரட்டுத் தனத்துக்கு நான் ஆளில்லை ; இது நேரமுமில்லை.' . குமாரைத் தூக்கிக் கொண்டு போவது என்ற பிடிவாதம் ராஜ்பகதூருக்கு இது தேவையில்லாத வீண் முயற்சி என்பது குமாரின் எண்ணம். வாய்ச் சண்டை முற்றியதால், அந்த வேகம் தாங்காது மீண்டும் மயக்க மடைந்தான் குமார்;