பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சகோதரர் அன்ருே? சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் இருவரும் ஒருவரோ டொருவர் சண்டையிட்டு மோதிக்கொண்டு தரையில் புரண்ட காட்சியை அப்போது நினைத்துக்கொண்டான் ராஜ்பகதூர், பஞ்சாப் மாநிலக் கல்லூரி ஒன்றுக்கும் சென்னைக் கல்லூரி ஒன்றுக்கும் சென்னை விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி போட்டி நடந்தது. இருவரும் இரு வேறு கட்சிகளின் தலைவர் கள் மாணவர்களும் பொது மக்களும் கூடி ஆட்டக்காரர்களே ஆரவாரங்களோடு உற்சாகப் படுத்திக்கொண்டிருந்தனர். வட இந்திய மாணவர்களின் தலைவனை ராஜ்பகதூர் பீமசேனனைப் போன்ற உருவத்தோடு, மின்னல் வேகத்தில் அங்கு மிங்கும் ஒடி கோல் போடப் பார்த்தான். குமார் அதிகமாகப் பர பரப்படையவில்லை. நளினமாக மட்டையால் பந்தைத் தள்ளி விட்டு வெற்றி கொள்ளப் பார்த்தான். இடைவேளை வரையில் இரு புறமும் கோல் விழவில்லை. கடைசிக் கால் மணி நேரத்தில் சென்னை மாணவர்கள் லாவக மாக ஒரு கோல் போட்டு விட்டார்கள். கை தட்டலால் மைதானமே அதிர்ந்தது. ரசிகர்கள் பலர் வெறி பிடித்துக் கூத்தாடினர்கள். இவற்றுக்கிடையில் சில அரை வேட்டுக்கார உணர்ச்சிப் பித்தர்கள் ஒழிந்தது வடக்கு ' என்று கூக்குர விட்டனர். *: திடீரென்று விளையாட்டில் சூடு பிடித்துக் கொண்டது. ராஜ்பகதூர் பம்பரமாக மைதானம் முழுவதும் சுழன்று, பந்து ருட்டிக் கொண்டு ஓடினன். குறுக்கிட்டவர்களிடமிருந்து சாகசத் தோடு பந்தைக் காப்பாற்றினன். பிறகு, கடைசி நிமிஷத்தில் தன் பலமனைத்தும் சேர்த்துச் சென்னைக் கல்லூரிக்கு ஒரு கோல் ' போட்டான். நீண்ட குழலும் ஊதினர் நடுவர். வெற்றி தோல்வி யின்றி முடிந்தது ஆட்டம்: - அத்துடன் நிற்கவில்லை விஷயம். ராஜ்பகதூர் கோல் ' போட்ட சமயம், இடது பக்கத்திலிருந்து குறுக்கே வந்து விழுந்த ஒரு தமிழக இளைஞன் பலமான அடிபட்டுத் தலே குப்புறப் போய் விழுந்தான். . * - - குமாருக்கு கோல் விழுந்து விட்ட ஆத்திரம் வேறு. அத் துடன் ராஜ்பகதூர் வேண்டுமென்றே தங்கள் கட்சிக்காரனை அடித்து விட்டான் என்ற எண்ணம் வேறு. ஒடிச் சென்று தன்னை மறந்த வெறியில் ராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத ராஜ், ஹாக்கி மட்டையால் அவன் கழுத்தை வளைத்து இழுத்தான். இருவரும் வெறியோடு கட்டிப் புரண்டு உருண்டார்கள் துடிப்பு மிக்க இளம் ரத்தமல்லவா?