பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலன் 169 " தந்திரக்கார மதராஸிகள் ! ... ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் 1’ என்று ராஜ்பகதூரின் ஆள் ஒருவன் உளறி வைத்தான்.

  • " கோல் போட்டு ஜெயிக்க வக்கில்லை ; காலொடிக்க வந்து விட்டான்.-வடக்கத்தி முரட்டுத் தனம் இங்கே சாயாது! ’’ என்ருன் மறத் தமிழன் ஒருவன்.

வாய்ச் சண்டை முற்றி, சூடான பத்திரிகைகளின் பர பரப் பான செய்தியாக வளர்ந்து மேடை முழக்கங்கள் வரையில் முற்றி விட்டது விவகாரம்: விளையாட்டு, கசப்பு நிறைந்த வினையாக முடிந்து விட்டது. இருவருக்குமே சில்லறைக் காயங்கள். நெருக்கடி நிலையின்போது திடீரென்று இருவரும் ராணுவ முகாமில் சந்தித்தபோதுதான் இருவரும் ராணுவத்தில் சேர்ந் திருப்பதைப் புரிந்துகொண்டார்கள். பழைய மனக் கசப்பின் தழும்பு ஒரு மூலையில் இருவருக்கும் இருந்து கொண்டுதான் இருந்தது. என்ருே நடந்த விஷயங்கள் இவை. இருள் பரவத் தொடங்கியவுடன் துப்பாக்கியைத் தூக்கித் தோளில் மாட்டிக்கொண்டு, குமாரைப் பற்றித் துரக்குவதற்கு முயன்ருன் ராஜ்பகதூர். வேண்டாம், என்னை விட்டு விட்டுப் போ ! ... வீணய் நீ அவதிப்பட வேண்டாம். வழியில் எந்தச் சீனணுவது எதிர்ப்பட் டால், எனக்காக நீயும் சாக வேண்டி வரும் ... போ, ராஜ்பக தூர் 1'-மன்ருடிஞன் குமார் ; கெஞ்சினன். ' குமார், உன்மீது எனக்குப் பாசமில்லை ; பற்றுதலும் கிடை யாது. இந்தத் தேசத்துக்கு ஒரு வீரனின் உயிர் இந்த நேரத் தில் மிகமிகத் தேவையானது. என் கடமையில் நீ குறுக்கிட வேண்டாம்.' - . பிடிவாதமாகக் குமாரைத் தூக்கித் தோள்மீது சாய்த்துக் கொண்டு, இரவின் மங்கலான நிலவில் தனது பயணத்தைத் தொடங்கினன் ராஜ்பகதூர். நிலவின் வெளிச்சத்தையும் மறைப்ப தற்குப் பணி மழை வந்து சேர்ந்தது. கண்களுக்குப் பாதை புலப்படவில்லை. பனிக் கூடாரத்துக்குள் அகப்பட்டது போன்ற பிரமை. ஆனல் எந்தத் தடைகளும் ராஜ்பகதுரரின் உறுதியைக் குலைக்க வில்லை. உள்ளத்திலே வைராக்கியம், எண்ணத்திலே நற்செய