பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சகோதரர் அன்ருே ? வின் பூரிப்பு, தன் தாய்த் திருநாட்டின் சகோதரனைக் காப்பது தேச பக்தி என்ற லட்சியம் இவ்வளவும் அவனுடைய நடைக்கு வேகம் தந்தன. விண்ணிலிருந்து பனி மழை ; அவன் உள்ளத்திலிருந்து அதை விரட்டும் நெருப்பு. வெளியில் இருட்டு, உள்ளுக்குள் பேரொளி. உடலில் பசி, களைப்பு, சோர்வு ; நெஞ்சில் நிறைவு, தெம்பு, உற்சாகம் ! அவனே அந்தக் கோலத்தில் யாரும் கண்டால் வெறி பிடித்த பேய் என்ருே பிசாசு என்ருேதான் சொல்வார்கள். அவன் தோளில் கிடந்த குமார் இரவெல்லாம் ஏதேதோ பிதற்றினன். குமாரின் உடல் நெருப்பாய்த் தகிப்பது அவனுக் குக் கடுமையான ஜூரம் என்பதை ராஜ்பகதுருக்கு உணர்த் தியது. ஒரு வகையில் அவன் கவலைப்பட்டாலும், இறந்து போகாமல் உயிரோடிருக்கிருனே என்று ஆறுதல் கொண் LT o. இரவு முழுதும் அவன் நடந்த நடை, அந்தப் பயங்கரமான காடுகளுக்குத் தெரியும்; தூரத்துப் பனிமலைகளுக்குத் தெரியும்; இரக்கமில்லாமல் கொட்டிய கடும்பனிக்குத் தெரியும். ஆனல் குமாருக்குத் தெரியாது. பொழுதும் விடிந்தது. அருவிக் கரையும் வந்தது. அதன் பாலத்தைப் பாரதவீரர்கள் தகர்த்திருந்தார்கள். முதல் நாள் அங்குக் கடுமையான போர் நடந்திருப்பதற்கான சின்னங்கள் சுற்றுப்புறமெங்கும் சிதறிக் கிடந்தன. அருவியைத் தாண்டிச்செல்வது எப்படி ? ? என்ற கேள்வி எழுந்தவுடன், திடீரென்று ராஜ்பகதூரிடமிருந்த வலிமை மறைந்து விட்டது. தட்டுத் தடுமாறித் தன் தோள்சுமையைக் கீழே இறக்கிவைத்தான். தோள்களிரண்டும் வீக்கம் கண்டு இசிவெடுத்தன. பனியால் பாளம் பாளமாக வெடித்திருந்தது உதடு. கண்கள் சிவந்து பார்வை மங்கி, எரிச்சல் கண்டது-ஒவ் வொரு மயிர்க்காலிலும் ஒரே வலி, வேதனை, குடைச்சல், ' கடவுளே, குமாரைக் கொண்டுசேர்க்கும் வரையிலாவது என்னைக் காப்பாற்று. பாரத தேசத்தின் மண்ணில் பிறந்தவன் அவன் ' என்று, தன்னை மறந்து வாய்விட்டு அலறினன் ராஜ் பகதூர். - குமாரின் செவிகளில் நண்பனின் ஒலம் விழுந்து விட்டதா ? கண்களைத் திறந்தான் குமார்; புன்முறுவல் பூக்கமுயன்ருன். “ பைத்தியக்காரா 1.எப்படியாவது தனியாகப்போய், குறுக லான இடத்தில் அருவியைத் தாண்டிவிடு : ...நான் சொல்வதைக்