பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலன் 171 கேட்கமாட்டாயா ராஜ் ? --குமாரின் குரல் ஏக்கத்தோடு ஒலித்தது. - பெற்ற தாய் ஒருத்தி தன் புதல்வனை உற்றுப் பார்ப்பது போல் குமாரைக் கனிவுடன் உற்றுப் பார்த்தான் ராஜ்பகதூர். ' குமார், எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. சகோ தரர்களும் இருக்கிருர்கள். ஆனல் உனக்கொரு மனைவி இருக் கிருள். இந்த மாதத்தில்தான் நீ தகப்பளுகப் போகிருய் என்றும் கேள்விப்பட்டேன். நான் இறந்தால், இந்த தேசம் ஒரு வீரனே மட்டும் இழக்கும். ஆனல் நீ?...நீ ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு வீரன் !...உனக்குக் கணக்குப் போடத் தெரியுமே? தேசத்துக்கு நம் இருவரில் இப்போது யார் முக்கியம் என்று கணக்குப் போட்டுப் பார் ! -ராஜ்பகதூர் தெளிவாக, உறுதி யோடு, உருக்கமாகப் பேசினன். என் குடும்பத்தைப் பற்றி...? ' 'உன் நண்பன் ஆறுமுகத்திடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்; குமாருக்கு வாயடைத்துப் போய் விட்டது. நிறை மாதக் காரியான அவன் மனைவி, அவனது நகரம், காவேரிக்கரை எல்லாம் நினைவுக்கு வந்தன. அத்துடன், சென்னையில் நடை பெற்ற மாணவர் ஹாக்கிப் பந்தயம், இருவரும் சண்டையிட்டு மண்டைகளை உடைத்துக்கொண்டது, வடக்கு-தெற்கு வீண் விவாரம், எல்லாமே மனத் திரையில் சுழன்றன. குமாரின் கண்கள் குளங்களாக மாறின. மெல்ல மெல் லத் தன் கரங்களை உயர்த்தி ராஜ்பகதுரரின் கழுத்தை வளைத் துக் கொண்டான். அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. தம்பி, தம்பி!...எனக்கு உடன் பிறந்தான் யாருமில்லை...நீ நீதான் அவன்...தம்பி '-பேச்சுத் திணறி மீண்டும் மயங்கி விழுந்தான் குமார். - மீண்டும் அருவிக் கரையோரமாகவே இந்தப் புனிதயாத் திரை தொடங்கியது. கனவும் நினைவுமற்ற ஏதோ ஒரு நிலையில், ராஜ்பகதூரின் தோளில் குமார் தொங்கிக் கொண்டுடிருந்தான்: அப்போது சரசரவென்று யாரோ காட்டுக்குள் ஒடும் சத்தம் கேட்டது. ராஜ்பகதூர் குமாரைத் தூக்கிக் கொண்டே ஓடினன்; சிய நினைவு வந்தது குமாருக்கு, உடல் முழுதும் கட்டுக் கள் போட்டிருந்தார்கள். முகாமின் ராணுவ ஆஸ்பத்திரி அது. குமாருக்குப் பக்கத்துக் கட்டில்களில் காயம் பட்ட வீரர்கள்