பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சகோதரர் அன்ருே ? சிலர் கிடந்தார்கள். அருகில் குமாரின் நண்பன் ஆறுமுகம் நின்று கொண்டிருந்தான். ராஜ்!...ராஜ் எங்கே?' என்று கேட்டான் குமார்: 'நமது காவல் வீரர்கள் அருவிக் கரையைத் தாண்டி வந்த போது, அங்கே உன்மீது விழுந்து கிடந்தான் ராஜ்பகதூர், உடலில் உயிர் இல்லை. அவனுக்குப் பத்தடி தூரத்தில் ஒரு சீனனின் சடலமும் கிடந்தது. இருவரும் ஒரே சமயத்தில் ஒரு வரையொருவர் சுட்டுக் கொண்டிருக்க வேண்டும். காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சீனர்கள் சிலரையும் நம் வீரர்கள் சுட்டிருக் கிருர்கள். ' குமார் எங்கோ தொலை தூரத்தில், கூடாரத்துக் கப்பால் தெரிந்த கானகத்தை ஊடுருவிப் பார்த்தான். ஒன்றுமே பேச வில்லை அவன். கண்ணிர் அவன் இரத்தத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது. வீட்டிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது ' என்று கூறி ஒரு கடிதத்தைக் குமாரிடம் நீட்டினன் ஆறுமுகம். அவன் மனேவிக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும், அது குமாரையே உரித்துக்கொண்டு வந்திருப்பதாகவும் செய்தி. - - நீண்ட பெருமூச்சு விட்டு, ஆறுமுகம், நான் சொல்வது போல் ஒரு பதில் எழுது' என்ருன் குமார்; ' என் மகனுக்கு ராஜ்பகதூர் என்று பெயர் வைக்கச் சொல்...அணுவளவு ஆறுதல், அவன் பெயரை அடிக்கடி கூப்பிடுவதாலாவது எனக்கு ஏற்படும். ' - - 'தமிழ்ப்பெயர் இல்லையே இது?’ என்று குறுக்கிட்டான் ஆறுமுகம் - - வேதனையோடு சிரித்தான் குமார். ' ராமன், கிருஷ்ணன், கைலாசம் என்றெல்லாம் தமிழ்நாட்டில் காலங்காலமாகப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிருர்களே, ஏன் தெரியுமா? ஆயிரம் வேற்றுமைகளுடைய நம் தேசத்தில் அடிப்படையான ஒரு பண்பாடு வலிமையாக இழையோடுகிற து. எனக்கும் உனக்கும் இமயமலை சொந்தம். அதல்ை நாம் அதைக் காக்க உயிர் கொடுக்க வந்திருக்கிருேம். அது போலவே கன்யாகுமரியும் ராமேச்வரமும் ராஜ்பகதூருக்குச் சொந்தம்-ராஜ்பகதூர் என் ரத்தத்தின் ரத்தம் : உயிரின் உயிர். அவனும், நானும், நாமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். நெடுங்கால உறவு இது.- நீ எழுது | * * ,