பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தெய்வயானை பாட்டன் பக்கத்தில் உட்காருவேன். அவர் இராமாயண, பாரி தக் கதைகள் சொல்லுவார். விக்கிரமாதித்தியன் கதை, தேசிங்கு ராஜன் கதை முதலியனவும் சொல்லுவார். இவைகளையெல்லாம் நான் மிகவும் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஒரு நாள் அவர் நளன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் என்பதாக நளனுக்குச் செய்தி வந்த இடத்தில் கதையை நிறுத்தி, உடம்பு சரியில்லை அப்பா ஏதோ ஒரு மாதிரியா இருக்கிறது. பாக்கிக்கதையை நாள்ைக்குச் சொல்லுகிறேன்' என்ருர். கதையை அவர் முடிக்கவேயில்லை; மறுநாள் அவருக்கு உடம்பு அதிகமாய் விட்டது. ஊரார் அவர் செத்துப் போய்விடுவார் என்று பேசுவதைக் கேட்டேன். செத்துப் போவதென்ருல் அது என்னவென்று எனக்கு அப்போது முழுதும் புலப்படவில்லை. எலி, பெருச்சாளி, பூச்சியின் சாவுதான் தெரியும். ஆனலும் எல்லாரும் பேசிக்கொள்வதைக் கேட்டு ஒருவிதத் துக்கம் உண்டாயிற்று. அதைவிடக் கதை பாக்கியாய் நின்றுவிட்டதே என்ற துக்கம் தான் அதிகமாயிருந்தது! எனக்கு இப்போது நன்ருய் ஞாபகமிருக் கிறது. அவர் அருகில் சென்று தாத்தா! நீ செத்துப் போகி முயா? வேண்டாம்! கதையை முடிக்காமல் செத்துப் போக வேண்டாம் ' என்று சொல்லி அழுதேன். அப்போது அவர் புன்சிரிப்பு சிரித்து, ' குழந்தாய் ! இதற்காக நீ வருத்தப்படாதே; நீ புத்தகம் படிப்பதற்குக் கற்றுக்கொள். நான் உனக்குச் சொன்ன கதைகளைவிட இன்னும் எவ்வளவோ நல்ல கதைகள் புத்தகங் களில் இருக்கின்றன. நீ படிக்கக் கற்றுக்கொண்டால், ஆயிரங் கதைகள் படிக்கலாம். மற்றவர்களுக்கும் சொல்லலாம்' என்ருர்: மறுநாள் அவர் இறந்து போனர். பாட்டன் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவேயில்லை. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. தாயிடம் உத்தரவு பெற்று அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போனேன். எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும் வரையில் நான் அங்கே இருந்தேன். வீட்டு வேலை, வயல் வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஆனல் படிப்பதை மட்டும் விடவில்லை. எங்கே யாரிடத்தில் கதைப் புத்தகம் இருந்தாலும் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு வந்து விடுவேன். விளங்கிலுைம் விளங்காவிட்டாலும் தட்டுத்தடுமாறி வாசித்து முடிப்பேன். ஒரு கந்தல் ஏடு அகப்பட்டால் கூட விடுவதில்லை. இவ்வாறு இராமாயணம், பாரதம், கந்தபுராணம், நளமகாராஜன் கதை, விக்கிரமாதித்தியன் கதை, அல்லி அரசாணி மாலை முதலிய பல நூல்களைப் படித்து முடித்தேன்.