பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி |8 அமுத நீர் ஆறுமுகப் படையாச்சி வீட்டுக்குள் நுழைந்தபோது, மனைவி வள்ளியம்மை வழக்கம் போல்தான் வரவேற்பு அளித் தாள். ' சொன்ன, கேட்டாத்தானே, அத்தனை பணத்தை, உருப் படாத மண்ணுன்னு தெரிஞ்சு, அதுலே போட்டுட்டு இப்படி மாடா ஒளேக்கணுமா ? ' ஆறுமுகப் படையாச்சி வயலைச் சுற்றிவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்தார். மனைவியின் சொற்களைக் கேட்டுச் சிரித்தபடி, வலதுதோளில் இருந்த துண்டை உதறி, இடப்பக்கம் போட்டுக் கொண்டார். எனக்குப் புரிகிறது உன் ஆதங்கம். நான் இன்னும் சாப்பிடலை. புருசன் பட்டினின்ன பெண்சாதி துடிக் கிறவள்னு எனக்குத் தெரியாதா ? ஆன, ஆம்பிளைங்க எடுத்த வேலையைத் தீவிரமா செய்யணுங்கறதை நீங்க மறந்துடக் கூடாது எனக் கூறியபடி கிணற்றடிக்குச் சென்றுவிட்டார். கிணற்றில் ஊறும் புதுநீரை மொண்டு மொண்டு இழுத்துக் குளிப்பதில் அவருக்குப் பேரானந்தம். குளித்துவிட்டு, அவரையே தாயாக நினைத்து அன்பு வரவேற்பு அளிக்கும் ஆவினங்களுக்காக வைக்கோல் புரியை எடுத்துக்கொண்டு கொட்டிலுக்குச் சென் ருர். அவற்றிற்குத் தன் கையில்ை ஊட்டிய பிறகே, அவர் உணவு உண்பார், சாப்பிடலாமா ?" குரல் கேட்டதும் வள்ளி திடுக்கிட்டுத் திரும்பினுள். என்னுங்க இது, நெத்தியிலே துண்ணுறு கூட நல்லாப் படியும்