பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி I 75 படி வெக்கலை. தேவாரமும், திருப்புகழும் படிக்கற நெனப்புக் கூட மறந்துடுச்சாங்காட்டியும் ? அதுக்காவதான் இந்த உருப் படாத நெலத்தைக்கட்டி அழுவlங்களேன்னு அடிச்சுக்கறேன். பசி வந்தா பத்தும் பறந்துடும். ' நான் சொன்ன உனக்குப் புரியாது வள்ளி. நீ என் பசி யைக் காட்டறே. நான் உன் பசியைக் காட்டறேன். தேவார மும் திருப்புகழும் முடிச்சுட்டு நான் வரும் நேரத்துலே நீ பசியிலே துவண்டு படுத்திருப்பே, என் மனசு நோவும். ” இந்த எண்ணம் வயல்லே சுத் தறப்போ இருக்கணும்.' மடக்கிவிட்ட பெருமையும், கணவரின் அன்பு முழுமையும் அடைந்துவிட்ட பெருமையும் கலக்க வள்ளி கூறினுள்.

  • நீ சொல்றதை ஒத்துக்கறேன். உண்மையாச் சொல் றேன். பட்டினத்துலே இருக்கறப்போ பிடிச்சு இளுக்கும் சக்தி இந்த மண்ணுக்கு இருக்கும்னு நான் நெனச்சதே கிடையாது. வயல்லே நுளேஞ்சதும் தாய் நெனப்புத்தான் நெஞ்சுலே முச்சூடும் இருக்கு ! உன்னைப் பத்திக்கூட நெனப்பு வர்ரதில்லை. எனக்கு என்னவோ இந்த நிலம் மண்பூமியாத் தோணறதில்லே. என்னைப் பெத்தெடுத்த தாயாக ஒருபக்கம் தெரியுது. பொறவு ஒரு சமயத்திலே நாம் வணங்கற தெய்வமாத் தோணுது. அதுக்காவ தான் என் சினேகிதரு ஒருத்தரு தாயும், தெய்வமும் ஒண்ணு; கண்ணுலே தெரிவது மண்ணு'ன்னு சொல்லுவார் போலிருக்கு. மனுசனுக்கு உணவு தர்ரதுலே மூணுபேரும் ஒத்தாப்பலே இருக் காங்களே !’’ -

சும்மா மண்ணு மண்ணுன்னு, அடிச்சுக்கிட்டே இருங்க3 இந்த உப்புமண்ணுக்கும் களர் மண்ணுக்கும் இம்மாம் மதிப்பு வெக்கறவங்க, வெளைச்சல் நிலம் வாங்கிப் போட்டிருந்தா, என்ன பேசுவீங்களோ !” கடைசியிலே கணவரைத் தேவாரமும், திருப்புகழும் படிக்கச் சொல்லிவிட்டுத்தான் வள்ளியம்மை கணவருக்கு அன்னம் படைத்தாள். சாப்பாடு முடிந்தபிறகு வெற்றிலைப் பெட்டியைக் கணவரின் அருகில் வைத்தாள், வள்ளியம்மை. ' காலையிலே முத்துக்குமரு வந்தாரு. ’’ ' குமருவா வந்தாரு ? அந்த நேரத்துலே நான் வூட்டுலே இருக்கமாட்டேன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே ! - வாயில் வெற்றிலையைப்போட்டு மென்றபடி ஆறுமுகம் கூறினர். அதெப்பத்தி எனக்குத் தெரியாது. வந்தாரு, நீங்க இல்லைன்னதும் திண்ணெலே குந்திக்கிட்டாரு...ரொம்பக் களைப்