பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அமுத நீர் பாக் காணப்பட்டாரு. அதனலே ஒரு கிளாஸ் பால் கொண்டு வந்து திண்ணெலே வெச்சேன். ' நல்ல வேலைசெய்தே ! எனக்கூறிய படையாச்சி, மனைவியை நோக்கினர். அவள் முகமே பால்வடியும் கனிவுக்குப் பொருள். இத்தனைகாலம் பட்டினக்கரையில் கணவரோடு வாழ்ந்தும், கிராமத்துப் பண்டைய நாகரிகத்தின் சின்னமாகத் தான் விளங்கிள்ை. காதில் சிவப்பு ஒலையும், மேலுக்குத் திருகும் கழற்றவே மாட்டாள். மஞ்சள் பூச்சின் ஒளியோடு நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு. தலைக்கொண்டை பக்கவாட்டிலி ருந்து மாறியதே கிடையாது. மூக்கில் வெள்ளை மூக்குத்தி. கழுத்தில் இரண்டு வடச் சங்கிலியோடு தடித்த மஞ்சள்கயிறு பிசுக்கு ஏருமல் இருக்கும். கழுத்தைப் பிடித்தாற்போல் வெட்டி, முழங்கை அளவுக்கு நீட்டிய கையுடன் ரவிக்கை. உடலில் ஜாதி வழக்கப்படி சுற்றிய கைத்தறிப்புடவை. அது எட்டு கஜம். கைகளில் இறுக்கிப்பிடித்த காப்பு. இது நாள்வரை வேறு நகையோ, பட்டுப் புடவையோ அவள் கேட்டிருக்கவில்லை. முகத் தில் எப்போதும் புன்முறுவல் என்று சொல்லமுடியாது, ஆனால், எக்காரணம் கொண்டும் கோபிக்கமுடியாத கனிவுநிறைந்த ஆழம். கணவரோடு சண்டையிடுவாள். அவர் வேளா வேளைக்குச் சாப்பிடாவிட்டால்...அவர் சாப்பாட்டைத் தாமதமாக்கிவிடும் வயல்மீது அவளுக்குக் கோபம்வரும். கனிவும் குழைவும் பரிவு மாக அந்த மங்கை முகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டி ருப்பார் படையாச்சி. ஐம்பது வயசுக்கான தொள தொளத்த சதையோடு உள்ளமும் நாளுக்கு நாள் நிரம்பி வழியும் அந்த உருவத்தில் அவளுக்குப் பற்று. - உட்கார்ந்திருந்த வள்ளியம்மை சுவரோடு சாய்ந்து படுத்து விட்டாள். - வள்ளியம்மை, நானே போய்க் குமருவைப் பார்த்துட்டு வரேன். நீ கதவைத் தாளிட்டுப் படு ' எனக்கூறிய படையாச்சி வெளியே கிளம்பி விட்டார். வீட்டைத் தேடி முத்துக்குமரு வந்த காரணம் அவருக்குத் தெரியும். தம் மனக் கொதிப்பைக் கொட்டத்தான் வந்திருப் பார். முத்துக்குமரு ஒருவருக்கே மதுரைச் சீமையிலே-அந்த வட்டாரத்திலே அத்தனை நிலமும்...சொந்தமாக இருந்தது...உவர் நிலமும் களர் நிலமுமாக அத்தனையும் பரம்பரைச் சொத்துத் தான். அவருக்கு இந்த நிலத்தைக் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தந்தை தான் இருந்தவரை வியாபாரம் என்று செய்துவிட்டு நான்கு வருடங்களுக்கு முன்புதான் கண்ணே மூடினர். தந்தை இறந்த பிறகும் வயிற்றுப் பிழைப்புக்காக