பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி 五?? நிலத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை: மூத்த மகன் சென்னையில் எஞ்சினியராக இருந்தான். இளையவன் தாத்தாவின் வியாபாரத்தைப் பம்பாயில் நாட்டினன். எடுத்த எடுப்பில் கொள்ளை லாபம். அங்கேயே தங்கிவிட்டான். இரு பிள்ளைகளும் தந்தைக்குப் பணம் அனுப்பி வந்தனர். தங்களுடன் வந்திருக்கும்படி பெற்ருேருக்கு அவர்கள் என்றுமே அழைப்பு விடுத்ததில்லை. பெற்ருேரைப் பார்க்க எப்போதேனும் அவர்களே வருவார்கள். கவனிப்பாரற்ற நிலத்துக்கு ஆறுமுகத்திடமிருந்து பேரம் வந்ததும் முத்துக்குமரு அதிசயித்து நின்று விட்டார். உவர் மண்ணையும், களர்மண்ணையும், பயிரிடுவதற்கு ஒருவர் வாங்கு வதென்ருல்...பேரம் அதிகம் பேசவில்லை. சொன்ன விலைக்கு விற்றுவிட்டு நல்ல ஏமாளி' என மனைவியிடம் கூறிச் சிரித்துக் கொண்டார். ஆனல் பணம் அவர் கையில் தங்கவில்லை. புத்திரர் கள் ஏதோ சாக்குச் சொல்லி பங்கு போட்டுவிட்டனர். முத்துக்குமரு நினைத்தபடி ஆறுமுகம் ஏமாளியாக இருக்க வில்லை. ஆறுமுகத்தைப் பற்றிக் குமருவுக்கு அதிகம் தெரியாது. பெற்ருேரற்ற அநாதையான ஆறுமுகத்தை எட்டாவது வரை படிக்க வைத்தவர் அவருடைய மாமன். பட்டினக் கரை யில் துணிச்சல் ஒன்றையே மூலதனமாக வைத்துப் பல சிறு கடை களில் எடுபிடி ஆளாக அமர்ந்து பிறகு பெரிய பட்டறைகளில் பெரிய ஆளாக நின்று. கடைசியில் சொந்தத்தில் ஆறுமுகம் தொழில் ஆரம்பித்தபோது அவருக்குத் துணை ஊக்கமும் உற்சாகமும்தாம். வெற்றியைக் கைப் பிடித்த நேரத்தில் மாமனின் ஒரே மகள் வள்ளியம்மை வாழ்க்கைத் துணைவி யாளுள். இன்று வரை குடும்பத்தில் அவ்விருவருமே குழந்தை கள். தொழிலில் முன்னுக்கு வந்துவிட்டவருக்கு முதலில் உற்சாகம் இருந்த போதிலும், வயதும் தொழிலும் பிணைந்து ஏறியபோது லைசன்ஸ், கோட்டா, ஏற்றுமதி இறக்குமதி, வரிச் சள்ளைகளோடு வேலை நிறுத்தம் தொழிற் சங்கம் எல்லாமாக அவரை அயர வைத்துவிட்டன. எடுத்த தொழிலில் பழக்கம் ஏற்பட்டுவிட்டதில் தனித்தவோர் அலுப்பு: முயற்சிக்கு இடமில்லை. - அப்போதுதான் அவருக்குத் திடீரென அந்த எண்ணம் தோன்றியது. நாட்டின் உணவும் பற்ருக்குறையைத் தீர்க்க, தரிசாகக் கிடக்கும் நிலங்களே வளர்பூமியாக்கும் பணியில் ஈடு படத் தலைவர்கள் விடுக்கும் வேண்டுகோள் அவர் மனத்தில் பதிந்தது. உடனே, அவர் தன் கம்பெனியை விற்று, வந்த பணத்தில் பாதிப் பணத்தை மனைவியின் பெயருக்குப் பாங்கில் &rr— 12