பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 78 அமுத நீர் கட்டிவிட்டு, மீதமிருந்த பணத்தில் உவர் நிலத்தையே வாங்கினர். பலர் அவர் செயலைப் பரிகசித்த போது மண்ணப் பொன்னக்கற ரஸாயன வித்தையைச் செய்து பார்த்தாப் போச்சு, கிடைச்சா எனக்கு லாபம். கிடைக்கலைன்ன நான் ஒருத்தனையும் வஞ்சிக் காம நஷ்டத்தை எனக்கே வெச்சுப்பேன் என்ருர், ! முதலில், சிறிதளவு நிலத்தில் பரிசோதனை நடந்தது. நவீன முறையில் நிலத்தை உழுது பண்படுத்தி, விவசாய அதிகாரி களைக் கலந்து நவீன முறையிலேயே உரமிட்டார். பட்டினக் கரையை விட்டுக் கிராமத்தோடு குடியேறி நிலத்தை அருகிலி ருந்து பயிரிட்டார். இதுவும் மாயமோ, மந்திரமோ நோஞ்சான் குழந்தைக்குச் சத்துள்ள ஊட்டம் கொடுத்து வலிமையாக்கி விட்டது போலல்ல வோ இருந்தது ஆறுமுகப் படையாச்சி, பெற்ற தாயை அறிந் திருக்கவில்லை. விலை கொடுத்து வாங்கிய உவர் மண்ணையும் களர் மண்ணையும் தாயாகப் பாவித்தார்; உருக்குலைந்து படுத்து விட்டிருந்த தாயை மெல்ல அரவணைத்து, ஆறுதலும் அன்புமாக ஊட்டச் சத்து அளித்து வலிமைக்கு உதவும் மகளுக விளங்கினர். பூமித் தாயின் கண்களில் அன்பு நீர் சுரந்தது. ஊட்டம் கண்டவள் வஞ்சித்துவிடுவாளா ! செழிப்பும் வளமையுமாகக் கதிர்கள் ஆடி ஆடி மகிழ்ச்சியோடு களிக்கும் பருவத்துக்கான அறிகுறி கண்டது. இந்த அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்தம் எய்த நிதமும் பெரும் பொழுதை வயலிலேயே கழித்தார் ஆறுமுகம். கணவரின் வெற்றியில் வள்ளிக்கும் ஆனந்தம் இல்லாமலா இருக்கும்? ஆனால், கணவருடைய உழைப்பல்லவோ அவளை நெஞ்சுருக வைக்கிறது! முத்துக்குமருவுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந் தது. இந்த மலட்டு மண்ணை விற்று, தான் லாபம் கண்டு விட்டதாக இறுமாந்திருக்கும்போது, இதோ பாரடா, நான் தாய்மையின் மகிழ்ச்சியில் பொங்குகிறேன் ! என்றல்லவோ ஆறுமுகத்தின் கை அணைப்பில் பூமித்தாய் அவரைப் பார்த்துச் சிரிக்கிருள் ! சிறு பரிசோதனை செய்த நிலத்திலிருந்தே ஆறு முகம் சென்ற வருடமே களஞ்சியம் வழிய நிரப்பிவிட்டபோது, முத்துக்குமருவுக்கும் அன்பளிப்பாகக் கொஞ்சம் கொடுக்கத் தான் செய்தார். அதன் பிறகு மனைவி மீளுட்சியின் நச்சரிப் பில் இந்நாள் வரை உழப்படாத தன் மிகுதி நிலத்தில் முத்துக்கு மரு ஏர் கட்டி உழுதார். விதை விதைத்தார். ஆனால், ஆறு முகப் படையாச்சியிடம் கனிவுள்ளம் கண்ட பூதேவி தன்னிடம் ஏன் காட்டவில்லை? உழப்பட்ட நிலம் வளமே காணுமல் அல்லவோ நிற்கிறது . இந்தப் பூமித்தாய்க்கு இத்தனை வஞ்ச னேயும் உண்டோ !