பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி i 79 ஆறுமுகப் படையாச்சி குமரு வீட்டின் திண்ணையில் அமர்ந்த படியே, " அண்ணுச்சி ! ’’ என்று குரல் கொடுத்தார், குமரு வெளியே வந்தார். அவருடன் அவர் வேலையாள் கந்தனும் வந்தான். குமரு திண்ணையில் அமர்ந்ததும் கந்தன் திண்ணைக்கு அருகில் ஒரமாக நின்றுகொண்டான். ஆறுமுகம் கந்தனை ஏற இறங்க நோக்கினர். நல்ல வலிவுள்ள உடல். அடர்ந்த மீசையே அவனுடைய துணிச்சலுக்குச் சான்று. உருண்டு தி ர ண் டு மார்பு. சதைப்பற்றுள்ள கைகள். இடுப்பில் மூலக்கச்சமும் தோளில் ஒரு துண்டும் தலையில் முண் டாசும் தாம் ஆடைகள். வயது முப்பதிலிருந்து நாற்பதுக்குள் இருக்கலாம். மணமாகாத காரணம் அவனுக்கே தெரியாது. ஒரே ஒரு சகோதரன் பழநி, அவன் சேனையில் சேர்ந்து கொண் டான். சீனர்கள் படையெடுப்பை எதிர்க்கும் பணியில் அவன் தன் உயிரை இழந்துவிட்டான். வீட்டில் அவனை நம்பி வாழும் தாய் அங்கம்மா. கந்தன் வெகு காலமாக முத்துகுமருவிடம் வேலை செய்பவன், மிகுந்த எசமான விஸ்வாசமுள்ளவன். " வீட்டுக்கு வந்தீங்களாம்... '- ஆறுமுகம் ஆரம்பித்தார்: ஆமாம்... உங்க பேச்சைக் கேட்டு நெலத்திலே கை வெச்சேனே, அந்த வவுத்தெரிச்சலை உங்களையே நேரில் அழைச் சிட்டுப் போய்க் காட்டலாம்னு வந்தேன் 1'- மடியிலிருந்த துண்டைத் தோளில் போட்டபடி குமரு ஆறுமுகத்தை நேராகப் பார்க்காமலே சினத்துடன் கூறினர். ஆறுமுகம் கோபம் கொள்ளவில்லை. மெள்ளப் புன்னகை புரிந்தார். அண்ணுச்சி, உங்க கோபம் எனக்குப் புரியுது. ஆன இந்த நெலத்தை நீங்க தொழில் முறையிலே நோக்கணும். முன்னுக்குப் போட்டாத்தானே, பின்னுக்குப் பணம் பொரட்ட லாம். ' - அவர் கூறியது முத்துக்குமருவுக்கு நன்முகப் புரிந்தது. நவீன முறையில் ஆறுமுகம் நிலத்தில் புகுந்திருக்கிரு.ர். ஆயிரக் கணக்கில் செலவு செய்திருக்கிரு.ர். ஆனால், குமருவோ செலவு செய்ய முன்வரவில்லை. நவீன முறையைக் கையாளவும் இல்லை. கந்தா, தம்பி சொல்றதைக் கேட்டுக்கிட்டையா? - குமரு கந்தனிடம் முறையிட்டார். புரியுது எசமான், இந்தக் காலத்து மனுசங்களே பரம் பரை வழக்கங்களைத் தூக்கி எறிஞ்சிட்டுத் தானேபேசருங்க ஆறுமுகமோ விடை பெற்றபடிக் கூறினர். ' அண்ணுச்சி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது. உடம்புக்கு நல்ல