பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அமுதகீர் டானிக் கொடுக்கருப்பல நெலத்துக்கு ரஸாயன உரம் இடணும். காலத்துக்கு ஏத்தாப்பல, விஞ்ஞான முறையிலே மாறனும். கிராமத்துலே இருந்தவன் நகரத்துக்கு ஒடருன். வெறகு வாங் கியா சமைக்கிருன்? பொகைப் போக்கி இல்லாத அஞ்சு மாடி வீட்டுக்கு ஏத்தாப்பல காஸ் அடுப்பும் ஸ்டவ்வும் வெச்சுக்கருன். உரம் வாங்கப் பணம் போடணும். ஒண்ணு போட்ட மூணு எடுக்கலாம். பணமில்லேன்ன இந்த நிலத்தையே அடமானம் வெக்கலாம். நான் மறைச்சுப் பேசலே. கைப்பணம் போதாம வயல் வேலைக்குக் கடனுலேதான் ஆரம்பிச்சேன். போன விளைச் சல்லே கொஞ்சம் அடைச்சேன். இந்த போகத்துலே முச்சூடும் அடைஞ்சுடும். இந்தாப்பா கந்தா, நீ உழைப்புக்கு உறுதியான வன், நெலத்துலே உரம் போடருப்ல உழைப்பையும் போட இணும்... s? ஆறுமுகம் விடைப்பெற்றுச் சென்றதுமே முத்துக்குமரு கந்தனைக் கோபத்துடன் நோக்கினர். ஏலே, கேட்டுக்கிட்டுதானே இருந்தே இந்நேரமும்: எசமானின் உறுமலில் கந்தன் கொஞ்சம் நடுங்கிவிட்டான், 'ஐயா சொல்றது புரியலை !’ " உனக்கெப்படிடா புரியும்? எத்தனை எக்காளமும் பெருமை யுமா பேசிகிட்டுப் போனன் அவன். நேத்தி இந்தக் கிராமத் துக்கு வந்த பிள்ளை பேசருன், நான் கேட்டு நிக்கும்படி பார்த்துக்கிட்டு நிக்கறயேடா... என் வீட்டு உப்பைத் திங்கற வன் நீ, எனக்கு வெக்கற மரியாதை நல்லாயிருக்குடா.' புரியுது எசமான் அவரு பெரிய படிப்பா பேசருரே. நான் எப்படி எதிர்த்து வாதாட முடியும்? அவரோட நிலமும் அவர் படிப்புக்குச் சாட்சியா நிக்குதே... ' சாட்சியா நிக்கும்டா, நிக்கும் படிப்பா அவனுக்கு உத வது? கை வெச்ச வேளேடா, பொன்ன பொழியறது. அந்தத் திமிருதான் நமக்கு உபதேசம் செய்ய வெக்குது. இவனைப் பார்த்து நான் நிலத்துலே கை வெச்சு நூத்துக்கணக்குலே மண்ணுக்கிப்பிட்டேன். என்னைப் பரிகாசம் செய்யல்ல இப்படி வந்துட்டுப் போருன் ! கடன் வாங்கனுமாமே கடன் இவன் நெனப்பு எனக்குத் தெரியாதாக்கும் ! கடன் வாங்கி நான் ஏலத்துலே நின்னுட்டா, அப்பாலே, அந்த நிலத்தையும் ‘அபேஸ் பண்ணிக்கணங்கறது எண்ணம். ' - கடைசி வார்த்தை கந்தனை நிமிரச் செய்தது. " நெசமா அந்த எண்ணம் இருக்குமாங்க