பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி I 81 இல்லாம என்னடா ? கை வைக்கற இடமெல்லாம் பொன்னப்போற ராசிக்காரங்க எதைத்தான் செய்யமாட்டாங்க! உன்னையும் உழைக்காத சோம்பேறின்னு குத்திக் காட்டிட்டுப் போருன். நீயும் வெக்கமில்லாம கேட்டுகிட்டுத்தானே இருக்கே ! - முத்துக்குமரு அழுத்தமாகக் கூறியது கந்தனின் நெஞ்சைத் தட்டி எழுப்புவதுபோல் உணர்ந்தான். உழைக்காத சோம்பேறின்ன ஆறுமுகம் கூறினர்?... அப் படித்தான் சொல்லியிருப்பாரோ ... அப்படித்தான் இருக்கவேண் டும். இல்லாவிட்டால் அவன் உழைப்பைப்பற்றி அவர் எதற் காகப் பேசவேண்டும்? விளைச்சல் நிறையக் கண்டு விட்ட பெருமைதானே அப்படிக் குத்தலா பேசச் சொல்லியிருக்கும்... கந்தன் யோசனையிலிருந்தபோதே குமரு மீண்டும் அவனைக் குத்திக் கிளப்பினர்: அவைேட கொட்டத்தை அடக்கறத்துக் காகவாவது உன் உழைப்பையும் வலிமையையும் காட்டலா மேடா சோமாரிப் பயலே ! குமரு கூறியது அவனுக்குப் புரியவில்லை. கொட்டத்தை நம்ப எப்படிங்க அடக்க முடியும். கதிர் கட்டற கட்டமா யிடுச்சே ! ? ' போடா அசடு ! இதுதான் சரியான சமயம்னு உனக்குப் புரிஞ்சிக்கத் தெரியலே. செங்கோடனையும் சேர்த்துக்கிட்டியான ஒரே இரவுக்கு யானை புகுந்த கதையா நாசமாக்கிடலாமே. பகலுக்கெல்லாம் வயல்லே உக்காந்திருக்கிற படையாச்சி இரவு நேரத்துக்கு நடக்கறதை எப்படி அறிஞ்சுக்குவான். நீ கையாளை வெச்சுட்டா உன் பெயர் எடுபடாம பாத்துக்கலாமே ! ’’ கந்தன் முதலில் தயங்கினன். குமரு அவனைத் துரண்டி விடுவதில் சளைக்கவில்லை. ' போடா, பயந்தாங்கொள்ளிப் பயலே ! ஒவ்வொருத்தனும் மனுசனையே வெட்டிச் சாய்ச் சுட்டு வந்துடருங்க. நீ சும்மா வயல் வேலைக்குப் பயப்படறியே: நீயேவா செய்யப் போறே, நீ வெக்கற ஆளு செய்யப்போருன்...' கந்தன் இணங்கிவிட்டான். செங்கோடனையும் பார்த்து ஏற்பாடு செய்துவிட்டான், கூலியும் பேசிவிட்டான். செங்கோ டனும் தன்னுடைய சகாக்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டான்: அமாவாசை இரவுக்குப் படையாச்சியின் வயலில் அவர்கள் இறங்கி விடுவார்கள். . . முத்துக்குமரு ஆனந்தம் கொண்டார். இத பார் கந்தா, இந்த வேலை நடக்கறப்போ நீ வயலுக்குப் போய் நிக்காதே. பொளுதுசாயுற வேளைக்கு ஆறுமுகம் வீட்டுக்குப்போய் நல்லவன்