பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அமுத நீர் மாதிரி பேச்சும் கொடுத்துட்டு வந்துடு. ஊர்க்காரங்களை நம்பி வயலுக்கு அவன் காவல் வெக்காதது நல்லதாப் போச்சு ' குறிப்பிட்ட நாள் இருட்டின் கருமை படர்ந்தது: ஆறுமுகப் படையாச்சி தன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந் தார். வள்ளியம்மை திண்ணையை ஒட்டிக் கீழே அமர்ந்திருந்தாள். வாப்பா கந்தா ! -இன்முகத்தோடு மகிழ்ச்சியுடன் வர வேற்ருர் ஆறுமுகம். - இந்த மகிழ்ச்சி காலையில் அழுகையாக மாறப்போகிறதே என, கந்தன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். "எங்கே இப்படி வந்தே ! -வள்ளியம்மை கேட்டாள். சும்மாதானுங்க. எங்க ஐயா ஆட்டுலே இம்மாநேரம் உங்களைப் பத்திதானுங்க பேசிக்கிட்டிருந்தோம். ' எங்களைப்பத்தியா என்ன விசயம் ? ' என்ன விசயம் இருக்கும்? நெலத்துலே போட்டபணம் விளைச்சல் காட்டுது. நமக்குக் காட்டலையேன்னு சொல்லிக் கிட்டிருப்பாரு...உம், நான் எத்தனை சொன்னலும் அவருக்கு ஏற மாட்டேங்குது. நான் என்ன செய்யட்டும். ஆறுமுகம் விசனத்துடன் கூறினர். " அக்காங் போங்க, உங்களைப்போல ஒடா தேய்ஞ்சு உளைக் கணுமாக்கும். இருக்கிற பணத்துலே பாதிபோட்டுட்டு, போதாம கடனுக்கு உழlங்க.. இந்த மண்ணு எம்மாம்பணம் சாப்பிட்டிருக்கும் !" "புரியுது வள்ளி நீ சொல்றது...நான் அவரை முதல்லே முயற்சி பண்ணச்சொல்லலையே. நான் பண்ணிக் காட்டியாச்சு. அதேைல நல்லமுறையிலே செய்து பாருங்கன்னு தானே சொன் னேன். நம்ம நிலத்துலே எப்படி விளைச்சல் காட்டியிருக்கு பாத்தியா?* கந்தன் தனக்குள் சிரித்துக்கொண்டான். நாளைக் காலை இவரு எப்படிப் பேசுவார்னு பாக்கணும்; வள்ளியம்மை பதில் கூருமலிருக்கவே ஆறுமுகமே மீண்டும் பேசினர் : மண்ணை வெச்சே பணமாக்கலாமே ! என்னப்பா கந்தா, நான் சொல்றது உனக்குக்கூடப் புரியலையா? ' “நல்லாப் புரியுதுங்க. ஆன, அவரு புள்ளை குட்டிக்கார ருங்க சொத்து சேர்த்தா சும்மா இருப்பாங்க, போய்டுச்சுை