பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி 3. இப்படிப் பல வருஷங்கள் சென்றன. ஒரு நாள் எனக்கு ஒரு நாவல் கிடைத்தது. ஆஹா அதைப் படித்தபோது நான் அடைந்த சந்தோஷத்தைச் சொல்லிமுடியாது. அது முதல் நாவல் பைத்தியம் என்னை நன்ருய்ப் பிடித்துக் கொண்டது. ஒரு முறை ஊரிலிருந்து சிலர் கிறிஸ்துமஸ் வேடிக்கை பார்க்கப் பட்டணத்திற்கு வந்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து வந்தேன். அவர்களெல்லாம். ஏதேதோ சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பினர்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா ? முர் மார்க்கெட்டில் பழைய கிழிந்த நாவல்களில் ஒரு கட்டு வாங்கிக்கொண்டு போய்ச் சேர்ந்தேன். இரவு பகல் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். இப்பொழுது நினைத்தால் மிகவும் ஆச்சர்ய மாய் இருக்கிறது. குப்பைத் தொட்டியில் போடுவதற்கே தகுந் தவை என்று இப்போது நான் கருதும் நாவல்களே அப்போது எத்தனை ஆவலுடன் படித்தேன், தெரியுமா? | இருக்கட்டும், நீங்கள் என்னைக் கேலி செய்வதில்லை என்று உறுதி கூறினால்தான் இனிமேல் கதை சொல்லுவேன் ' என்ருர் ஒமக்குட்டி முதலியார். ஒரு நாளும் கேலி செய்யமாட்டேன், சொல்லுங்கள் ' என்றேன்.) சாதாரணமாய் நாவல்கள் என்ருல் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியுமே? எல்லாம் காதல் மயம். நமது வாழ்வுக் குச் சற்றும் பொருந்தாதவை. ஆனால் நான் அப்போது பதி னெட்டு வயது வாலிபன். இவ்வளவு தூரம் பகுத்தறியும் சக்தி எனக்கில்லே. ஆகவே, மேற்படி நாவல்களைப் படித்ததன் பயனுகக் காதலைப்பற்றியும், விவாகத்தைப் பற்றியும், வருங்கால வாழ்வைப் பற்றியும் ஏதேதோ மனுேராஜ்யம் செய்யத் தொடங்கினேன். எங்கள் கிராமத்தில் அப்பொழுது பெரிய பணக்காரர் அப்புக் குட்டி முதலியார். அவர்தான் கிராம முன்சீப்புங்கூட. அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் தெய்வயானை. இப் பொழுது நினைத்துப் பார்த்தால் அவள் ஒரு சர்வசாதாரணமான பெண் என்றே தோன்றுகிறது. ஆனால் அப்போது நாவல் ’’ கண்ணுடன் பார்த்த எனக்கு அவள் ஓர் அப்ஸ்ர ஸ்திரீயைப்போல் காணப்பட்டாள். பூலோகத்திலும் சரி, தேவலோகத்திலும் சரி, அவளைப் போன்ற அழகி வேருெருத்தி இல்லை என்று நிச்சயமடைந் தேன். புத்தகத்தில் படித்த கதாநாயகர்களைப் போலவே நானும் அவளேக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் உயிர் பிழைத் திருக்க முடியாது என்று உறுதி கொண்டேன். இது வரையில் நாவல் படிப்பு பயன்பட்டது. இதற்கு மேல் என்ன செய்வதென்பதற்கு நாவல்களின் உதவி கிட்ைக்கவில்லை. நானே தன்னந்தனியனை வாலிபன், தகப்பனற்றவன்; ஏழை.