பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி 183 கூப்பாடு போடுவாங்களே ! ஏதோ பதில் கூறவேண்டும் என்ப தற்காகக் கூறினன் கந்தன். வள்ளியம்மையை இவ் வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். * கேட்டீங்களா அவன் சொல்றதை, பிள்ளையில்லாச் சொத் துன்னு காட்டருங்க... அன்னிக்கு ஒருநாள் மீட்ைசியம்மா கூடப் பிள்ளைகுட்டியா பாழாப் போவுது ; ஏதுக்கு இப்படி உளைக் கணும்னு உங்களைப் பத்தி ஊர்க்காரங்க பேசிக்கறதா சொன் ளுங்க. ' அவள் கண்களில் நீர் துளித்தது. மனைவியின் கண்ணிரே ஆறுமுகத்தை விசையாகக் கிளப்பி விட்டிருக்க வேண்டும் ! என்ன கந்தா, இப்படியா பேசிக் கிருங்க. ஊரிலே ஒருத்தன் ஒரு நல்ல காரியம் செய்யணும்னு அதைத் தனக்காகத் தான் செய்துக்கணுமாடா ? ஏண்டா, நானும்தான் கேக்கறேன், தனக்காக, தன் பெண்ஜாதி குழந் தைங்களுக்காகத்தான் செய்துக்கணுமா ? தான் பெத்த மகனும் தன்ளுேட பெண்ஜாதியும் மட்டும்தான் குடும்பமா? இந்த ஊரையே, இந்த நாட்டையே, இந்த உலகத்தையே நம்முடை யதா பாவிச்சுகிட்டுச் செய்ய நம்மாலே முடியாதாடா. உன்னேட அண்ணுச்சி பழநி இருந்தானே, அவன் சண்டையிலே உசிரை விட்டான். ஏதுக்காக விட்டான்? இந்தப் பொன்னை நாட்டைத் தன்னுடையதுன்னு, தன் குடும்பம்னு நெனச்சு தானேடா போனன்? அப்படிப்பட்டவங்களுக்கு நம்மாலே என்ன ஒத்தாசை செய்ய முடியும்னு நெனச்சுப் பார்க்கணும். இந்த நெலத்துலே விளையற ஒவ்வொரு மணி நெல்லும் எனக்குச் சொந்த மில்லைடா. இந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொருத் தனுக்கும் சொந்தம்...இந்த நெல் அரிசியா வந்து சோறு சமைச்சு ஒவ்வொருத்தரோட இலைலே விழறப்போ நாட்டுக் குழந்தை களும், பெரியவங்களும் வயிறு நிறைஞ்சு ஆனந்தமாத் திங்கறதை நான் பார்க்கணும், சந்தோசப் புடனும், அது தாண்டா என் கொள்முதல்...' - வள்ளி திடுக்கிட்டுக் கணவரை நோக்கிள்ை. இவர் இது வரை இவ்வளவு ஆவேசத்துடன் பேசினவரில்லை. நாம் கிளப்பி விட்டோமே என வருந்தினள். இந்தாங்க, எதுக்கு நாம் இப்படிப் பொளியணும்? ஏதோ நான் கேட்டதை வாங்கி அந்தக் காது வழியா விட்டுட்டுப் போகாம.."-கணவரைத் தேற்ற முயன்ருள். இந்தா வள்ளி. உன்னை மலடுன்னு சொல்லட்டும், என்னைக் குழந்தைக்கு வழியில்லாதவன்னு சொல்லட்டும், ஒப்புக்கறேன். ஆ ண் ட வன் படைப்புக்கு நான் சண்டை போட்டுக்கலை, ஆன. இந்த விளைச்சலை என் ஒருத்தனுக்கு: