பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 4 அமுத நீர் காட்டருங்களே, அதுதான் எனக்குப் பிடிக்கலை. திரும்பவும் அடிச்சுச் சொல்றேன். இத்தனையும் நாட்டு மக்களுக்கு, தாய் நாட்டின் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு வவுத்து உணவு. நான் நெல்லுக்குப் பணம் வாங்கப் போறவன்தான். ஆன அத்தனையும் போட்டு மலட்டு மண்ணைத் திருத்தத்தான் போறேன். நாட்டைக் காக்கப் போர் முனைக்குப் போன சிப்பாய்ங்க திரும்பிப் பார்த்து ஐயா நாங்க நாட்டுக்கு உசிரைக் கொடுக்கிருேம். நீங்க என்ன செய்யப் போlங்கன்னு கேட்டுட்டா நம்ப பதில் சொல்ல வேணுமா ? . நீங்க நாட் டைக் காக்க வலிமை பெற இந்தாங்க சோறு ன்னு நம்ப தர வேணுமா? மேட்ைடுக்காரங்க ஆயுதங்களைத் தயாரிக்க விஞ் ஞானத்தை உபயோகிச்சா, நாம அமைதியை விரும்பி உணவு உற்பத்திக்கு விஞ்ஞானத்தை உபயோகிக்கலாமே ! ஜப்பானிலே இந்த விவசாயத் தொழில்லே எப்படி முன்னேறிட்டாங்க ... கந்தா, என் மனசுலே பட்டதைச் சொல்றேன் கேட்டுக்க, இந்த மணி நெல்லும் வயல்லே வெளையற தானியம் முச்சூடும் தாய்ப் பாலுக்குச் சமம். மக்களுக்கு ஊட்டத்தைக் கொடுக் கும் அமுத சத்து. பொறத்தியான் கீழே சாப்பாட்டுக்குக் கப்பரை ஏந்த வேண்டாம்...நம்ப பூமித்தாய், இந்தப் பூதேவி, மாபெரும் அம்மை, பிராட்டி நமக்கு அமுத நீர் பெருக்கத் தயாரா இருக்கறப்போ, அவளுக்கு ஊட்டம் கொடுக்க நாம் உழைக்க ஏனப்பா தயங்கணும். கந்தா...க...ந்தா... அது அமுத நீர்... அ.முத நீர்...' ஆவேசமாக ஆரம்பித்தவர் கடைசியில் குரல் அடைக்க நெஞ்சுருகி விம்மும் நிலைக்கு வந்துவிட்டார். அந்தப் பெரிய ஆண் மகனுக்கே கண்களில் நீர் துளித்தது. பேசமுடியாமல் மெள்ளத் துனேடு சாய்ந்துவிட்டார். வள்ளியம்மை பதறிப் போய் அவர் அருகில் வந்தாள். . - ஆறுமுகப் படையாச்சி உள்ளே சென்று படுத்த பிறகு தான் கந்தன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்: நடையில் தள்ளாட்டம் உடலில் சோர்வு: கண்களில் ஒளியே மங்கிவிட்டது போன்ற தோற்றம் உற்சாகமும் துடிப்பும் விடை பெற்று விட்டதான தள்ளாமை. கந்தன் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து மெல்ல மெல்லத் தன் வீட்டுப்பக்கம் சென்ருன் நடு நடுவில் தயங்கித் தயங்கி நின்று விட்டான் . . - . . . . . . "...நாங்க நாட்டுக்கு உயிரைக் கொடுக்கிருேம். நீங்க என்ன செய்தீங்க... - வார்த்தைகள் ஆறுமுகப்படையாச்சி கூறியதாகவே இல்லை. அதேர் பழநி.அவனுடன் விளையாடிய அண்ணன், தனக்குத்