பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி 185 தின்பண்டங்கள் கிடைத்தபோது பல்லால் கடித்துத் தம்பிக்குப் பங்கிட்டுக் கொடுத்த உடன் பிறந்தவன், தாய் அடித்தால் உடனே ஓடிவந்து அணைத்துத் தேற்றிய தமையன், அம்மா, தம்பிக்கு வவுறு நிறையச் சோறு போட்டு நல்லா பாத்துக்க’ எனக் கூறி விடைபெற்று, எலே தம்பி, சுகமா இருக்கியா'ன்னு கடிதம் போட்டு வந்த சகோதரன்...அந்தப் பழநியா இப்படிக் கேட்டுக் கொண்டு நிற்கிருன் தமையன் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க உயிரைக் கொடுத்தவன் ... தம்பியோ ... மக்களின் உயிர்ப் பண்டத்தை நாசமாக்க வித்திட்டவன்... ஐயோ அம்மா !' - கந்தன் கூவினன் தள்ளாடித் தள்ளாடி அவன் வீட்டை அடைந்தபோது நடு இரவுக்கு ஆகி விட்டது. வீட்டிலோ... ஐயோ அம்மா, ஏன் இப்படி ஒப்பாரி வெச்சு அழுது கிட்டிருக்கே !’ அங்கம்மா பெரியதாகக் கதறினுள். வந்தியாடா மவனே, அடுத்த கிராமத்திலே இருக்கிற உங்க சித் தாத்தா மகாலட்சுமி போய்டுச்சேடா அவ புருசனுக்கு என்னடா பதில் சொல்லப் போறே ?” கந்தனுக்கு இடி விழுந்தது போலாயிற்று. லட்சுமியின் கணவன் வேலப்பனும் பழநியும் ராணுவத்திலே ஒன்முகச் சேர்ந்தவர்கள். லட்சுமியின் பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும், வேலப்பன் உயிரோடு இருந்தான். சென்ற வருடம் லீவில் வந்திருந்தான். குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து கந்தனுக்குத்தான் அவன் கடிதம் எழுதினன் : கந்தா, லட்சுமி உனக்குச் சொந்தத் தங்கச்சி போல. அவளையும் குழந்தையையும் நீதான் நல்லா பார்த்துக்கணும்...' கந்தன் அடிக்கடி சென்று லட்சுமியைப் பார்த்துவிட்டுக் குழந்தையை யும் கொஞ்சிவிட்டு வருவான். உடம்புக்கு ஒன்றில்லாமல் சுகமாக இருந்தவளுக்கு, திடீரென எப்படி முடிவு ஏற்பட்டது? 'என்னம்மா இது, திடும்னு இப்படிச் சேதி சொல்றே ? நாலு நாள் முன்னடி நான் போய்ப் பார்த்தப்போ நல்லாத்தானே இருந்தாள் 2 * * - சுகமாத்தாண்டா இருந்தாள். நம்பளைப் பாக்கலாம்னு சாயங்காலம் கிளம்பிளைாம். ரோட்டிலே வர்ர போது அந்தப் பாளாப் போன பஸ் சக்கரம் கயண்டு தறி கெட்டு ஒடி இவமேலே ஏறிச்சாம்: அங்கேயே உசிரு போயிடுச்சாம். இம்மாம் நேரம் நீ எங்கே போனியோ. நீ வந்த பொறவு போகலாம்னு குந்தி கிட்டிருக்கேன்...-அங்கம்மா கிளம்பி விட்டாள்.