பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அமுத நீர் 'அம்மோவ், குழந்தை என்ன ஆச்சு?'-கந்தன் கேட்டான் பட படப்புடன். அதையேண்டா கேக்கறே? இவவிழுந்த வேகத்திலே குழந்தை கையிலேந்து நழுவி தூர விழுந்திடுச்சாம். விழுந்த இடம் புல்லுத் தரை. அதனலே குழந்தை பிழைச்சுடுச்சு .. ஆளு, அந்தக் கண்ணராவியை ஏண்டா கேட்டுக்கறே, தாய்ப் பால் இல்லாம அது கத்தி விறைச்சுப்போவுதாம். அது என்னமா வயிறுநிறைஞ்சு பிழைக்கப் போவுதோ! அப்பன்காரன் எங்கேயோ மூலலே கிடக்கருன், நான் போறேண்டா நீவா ...”-அங்கம்மா அந்த நடு இரவிலும் தனியாகவே புறப்பட்டு ஓடிவிட்டாள். கந்தனுக்குத் தாயின் வார்த்தைகளைத் தொடர்ந்து வேறு சொற்களும் அல்லவோ கேட்கிறது. இந்த விளைச்சல் தாய்ப் பாலுக்கு சமானம்டா...மக்களுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும் அமுத சத்து.கந்தா.கந்தா...இது அமுத நீர்...' தாய்ப் பாலுடன் வளரும் குழந்தை பெரியவகுைம் போது பூமித் தாய் அளிக்கும் இந்த அமுத நீரில் அல்லவோ வளர்ச்சி காண்கிருன்... அங்கம்மா கவலையுடன் கூறினளே: குழந்தை என்னமா வயிறு நிறைஞ்சு பிழைக்கப் போவுதோ !” ஏன் வயிறு நிரம்ப வழி இல்லை ? இந்தப் பூமிப்பிராட்டி எங்கே போய்விட்டாள் ? அவளுடைய கை அமுதத்துக்கு வஞ்சனேயும் உண்டோ... வஞ்சனை இல்லை. ஆனல், இதோ படையாச்சியின் வளர்ப்பில் பூமி மாதா தயாராக்கும் அந்த அமுதநீர் இன்று மனிதனின் வெறிச் செயலில்... கந்தல்ை அதற்கு மேல் யோசித்தபடி நிற்க முடியவில்லை: லட்சுமியோ குழந்தையோ அவன் நினைவில் அந்த விநாடிக்கு இல்லை. எங்கிருந்து கால்களுக்கு அவ்வளவு பலம் வந்திருக்கும் ...வெள்ள நீர் பின் தொடரும் காட்சியாக, மக்களுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் அமுதம் ' என்ற வார்த்தைகள் அவனைத் துரத்த, வேகமாக முன்னேறினன். படையாச்சியின் வயலில் அப்போதுதான் செங்கோடனும் அவன் ஆட்களும் அரிவாளைத் தீட்டிக்கொண்டிருந்தனர். எலே, யார்ரா அது, கை வெச்சீங்கன்ன தீத்துபுடு வேன்.'-கந்தன் கூவிக்கொண்டே ஓடி வந்தான். ஆட்கள் திரும்பி நோக்கினர். அந்த அமாவாசை இருட்டி லும் செங்கோடன், கந்தனை அடையாளம் கண்டு கொண் டான். ' என்ன கந்தா, உஷாரா இருக்கணம்னு சத்தம் போட்டுகிட்டு வரையாக்கும். இந்தச் செங்கோடன் கிட்டே ஒருத்தன் வாலாட்ட முடியுமா?" -