பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ரங்கநாயகி 187 கந்தன், கையிலிருந்த பெரிய கழியைக் கீழே தட்டினன்; சும்மா இரு செங்கோடா, உண்மையாதான் பேசறேன். படையாச்சியோட இந்த நிலத்திலே ஒருத்தரும் கை வைக்கப் படாது. வெச்சா நான் பொல்லாதவளுயிடுவேன் ! நிலத்துலே கை வெக்காதே ’’ கந்தன் பேச்சு விளையாட்டில்லை என்பது செங்கோடன் புரிந்துகொண்டான். ஆனால், இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகு கூலி வாங்காமல் போய் விடுவான ஆல்ை, கந்தனே ! ...ம் வெட்டிச் சாய்ச்சு வவுத்துலே மண் போடற வேலைக்குக் கூலி கேக்கறியே, உனக்கு வெட்கமாயில்லை ?' எனக் கேட்டு விட்டான். செங்கோடன் புலிபோல் கந்தன் மீதே பாய்ந்துவிட்டான். கந்தனும் சளைக்கவில்லை. சத்தம்கேட்டு ஊர் மக்கள் வருவதற் குள் செங்கோடன் தன் கை அரிவாளினலேயே கந்தனைக் காயப்படுத்தி ஓடிவிட்டான். செய்தி அறிந்து ஓடிவந்த ஆறு முகப் படையாச்சி மூர்ச்சையடைந்து கிடந்த கந்தனை, தன் தோளிலேயே தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு எப்படித்தான் நடந்து சென்ருரோ ! ஊராரின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகாமலிருக்க முத்துக்குமரு இரண்டு நாட்கள் கழித்துக் கந்தனை ஆஸ்பத்திரியில் சந்திக்கச் சென்ருர். முத்துக்குமருவைக் கண்டதும் கந்தனே பேச ஆரம்பித்துவிட்டான். ' எசமானுக்கு நான் துரோகம் செய் துட்டதா நெனப்பீங்க. நீங்க இட்ட உப்புலேதான் இந்தத் தேகம் வளர்ந்தது. ஒத்துக்கறேன். ஆனல் உடம்பு வேறு, மனசு வேறுன்னு தோணுது. உங்களை நான் ஏமாத்திட்ட துரோகத்துக்கு இந்த உடம்புக்குத் தண்டனை கொடுங்க, ஒத்துக்கறேன். ஆன, அத்தனை வவுத்து சோத்தையும் காப் பாத்தாம என்னலே இருக்க முடியலே. எங்க லட்சுமியோட குழந்தே வவுத்துக்கு அழுவறது, என்னை வெறியனுக்கிடுச்சு. தாய்ப் பாலுக்குப் பிறகு அமிர்தமா வலுவு தரும் இந்தத் தானியத்தைக் காப்பாத்திட்டதுமே என க் குச் சந்தோசம் தாங்க...' குமரு பேசவில்லை. நகர்ந்து விட்டார். அறுவடை முடிந்துவிட்டது. அமோகமான விளைச்சல், கந்தனும் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிவிட்டான். அவன் மேற் பார்வையில் வயலில் வேலை செய்த அத்தனை பேருக்கும் ஆறுமுகப் படையாச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார். புரிந்தும் புரியாதவராகப் படையாச்சி பகைமைக் களையை எறிந்து விட்டு நட்புரிமையுடனேயே குமருவுடன் பழகியபோது குமரு