பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அமுத நீர் நெகிழ்ந்துவிட்டார். படையாச்சியின் வீட்டு விருந்தில் அவரும் அல்லவோ கலந்துகொள்கிருர். அவர் மட்டுமல்ல, மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து ஓடிவந்த வேலப்பனும் இருக் கிருன் அவன் எவ்வளவு கூப்பிட்டும், கந்தன் தோளை விட்டுக் கீழே இறங்க தன் மகனைக் கோபிக்கவில்லை. . . . . . .” 'பார்த்தீங்களா, சோறு போடறவன் கிட்டேதான். இதுக் குப் பிடிப்பு. எங்கிட்டே வரமாட்டேங்குது!’- வேலப்பன் மகனின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளியபடி கூறியபோது கந்தன், ' நானு சோறு போடறேன் ? ஐயாவை நெனச் சுக்கோ, அவர் நிலத்துக் கேழ்வரகு கஞ்சியும் அரிசிச் சோறும் உன் மகன் வவுத்துலே ' என்ருன். - " அப்படித் தப்பா பேசிடாதேப்பா !' எனக் கூறிய படை யாச்சி ஒரு பிடி மண்ணக் கையில் எடுத்துக் காட்டினர். ' இதோ பாத்தியா, இந்தப் பூமித் தாயின் கருணையிலும் கனிவிலும்தான் நாம நிக்கிருேம். இந்தத் தாயைக் காப்பாத்த வேலப்பனைப் போல வலிவுள்ளவங்க எல்லையிலே நிக்கருங்க. நாம பயமில்லாம தாய்க்கு வலிவூட்டி, அவ கருணையிலே அவங் களையும் வலுவாக்கி, நம்பளும் பசியாத்தருேம் ஜெய் கிஸான், ஜெய் ஜாவன்’னு தெரியாமலா சொன்னுரு...' இந்தப் பேச்சைக் கேட்டதுமே வேலப்பன் தல்ை வணங்கி நிற்க, கந்தன் நன்றிப் பெருக்குடன் தாய்நாட்டு மண்ணே நோக்குகிருன், ~~xx—