பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 19 யாருக்கு விரோதி? ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு முன்னல் பரீட்சை என்னும் பாதக த்தை நடத்தி முடித்துவிடும் அதிகாரிகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்து கொண்டே, நக்கீரன் தன்னுடைய சொந்தக் கிராமமான தாழம்பேடுக்குப் புறப்பட் டான். ஏறக்குறைய இரண்டு மாத காலம் அங்கே எந்த வித மான சலனமுமின்றி அமைதியுடன் காலத்தைக் கழித்துவிட்டு வரலாம் என்று நினைத்தபோது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலாயிருந்தது. முன்னுலாவது அந்தக் கிராமத்தில் சிலர் கள்ளையும் சாராயத்தையும் குடித்துவிட்டு வந்து அங்கங்கே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இப்போது அதுவும் இருக்காது; காந்தி ராசா புண்ணியத்தால்தான் மதுவிலக்குச் சட்டம் அமுலுக்கு வந்து விட்டதே! இவ்வாறு எண்ணி மகிழ்ந்தவண்ணம் அவன் தன்னுடைய கிராமத்தை அடைந்தபோது இருள் சூழும் நேரம், கிராமக் குடிசைகளெல்லாம் அநேகமாகப் புகைய ஆரம்பித்து விட்டன: குடிசைகள் புகைய ஆரம்பித்துவிட்டன என்ருல், அவற்றிலுள்ள அடுப்புகள் எரிய ஆரம்பித்து விட்டன என்று அர்த்தம்அடுப்புகள் எரிந்தால்தானே அந்தக் குடிசைகளில் அடைபட்டுக் கிடக்கும் அப்பாவி ஜீவன்களின் அடி வயிருவது கொஞ்சம் நிரம்பும் ? புகைந்து கொண்டிருந்த குடிசைகளுக்கு இடையே புகை யாமலிருந்த சில குடிசைகளும் இருக்கத்தான் இருந்தன. அவற் றைக் கண்டதும் நக்கீரனுக்கு என்னவோ போல் இருந்தது. 'கள்ளரக்கன் ஒழிந்த பிறகுமா இந்தத் தரித்திரம் ? என்று எண்ணி அவன் ஒரு கணம் ஏங்கினன். மறுகணம், மதுவிலக்