பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 யாருக்கு விரோதி ? கால் மட்டும் மக்களின் வறுமையைப் போக்கிவிட முடியா தல்லவா?’ என்று எண்ணியவய்ை மேலே நடந்தான். வழியில் ஒரு தேநீர்க் கடை குறுக்கிட்டது. அந்தத் தேநீர்க் கடையைக் கண்டதும் அதற்கு முன்னல் அங்கே இருந்த கள்ளுக்கடை அவன் மனக்கண் முன்னல் காட்சியளித்தது. ஆடலும் பாடலும் அடிதடிச் சண்டையுமாயிருக்கும் அந்த இடத்திலே, இப்போது அமைதி குடி கொண்டிருப்பதைக் கண் டதும் அவனுடைய அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தன. தன்னை மறந்த நிலையில் அவன் தேநீர்க் கடைக்கு முன்னல் சிறிது நேரம் அப்படியே நின்று விட்டான். கள்ளுக்கடை இருந்த நாட்களில் அங்கே கூடும் மனிதர்களை நக்கீரன் எத்தனையோ முறை கவனித்திருக்கிருன். அப்பொழு தெல்லாம் அவர்கள் அனைவரும் மனிதர்களாகவே தோன்றுவ தில்லை அவனுக்கு-அதே இடத்தில் தேநீர்க் கடை இருக்கும் இந்த நாளிலோ, அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அவனுக்கு மனிதர்களாகவே தோன்றினர்கள். இந்த அதிசயத்துக்கு மத்தி யில் இன்னும் ஒர் அதிசயத்தையும் அவன் காண நேர்ந்தது. அதாவது, தேநீரையும் அந்த மாஜி குடியர்கள் கள்ளைப் போலவே பாவித்துக் கண்ணே மூடியவண்ணம் குடித்துக்கொண் டிருந்தனர்!-அந்தக் காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாயிருந்த தோடு மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. அவர்களில் ஒருவன் இன்னொருவனை நோக்கி, என்ன, இசக்கிமுத்து அண்ணே! நம்ம பேச்சிமுத்துவைக் காணவே காணுேமே? என்று விசாரித்தான். அவனுக்கென்னப்பா, மவராசன் 1’ என்ருன் இசக்கிமுத்து. நல்லாச் சொன்னே, போ! மவராசனவது மண்ணுங்கட்டி யாவது! காலையிலேயிருந்து சாயந்திரம் வரை ரெண்டு ரூவாக் காசுக்கு அவன் குப்புக் கொல்லன் பட்டறையிலே என்னோடு சேர்ந்து இல்லே சம்மட்டி அடிச்சிக்கிட்டு இருந்தான் ?” இந்தத் தகவலைக் கேட்டதும், "நிசமாவா, நல்லமுத்து:" என்று வியப்புடன் கேட்டான் இசக்கிமுத்து. "ஆமாங்கிறேன் !' என்ருன் நல்முைத்து. " அப்படின்ன நான் நெனேச்சது சரிதான்; அவன் துத்தா' போட்டுகிட்டு வரத்தான் போயிருப்பான்!” என்ருன் இசக்கி முத்து. - - இந்தத் துத்தா என்ற வார்த்தையைக் கேட்டதும் நக்கீரன் திடுக்கிட்டான். அந்தப் பக்கத்துக் குடியர்கள் 'துத்தா”