பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 191 என்று சொன்னல் மது' என்று அர்த்தம். மதுவிலக்கைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டு வந்த அவனுக்கு இந்த வார்த்தையைக் கேட்டதும் எப்படி இருக்கும்?-முகத்தில் அசடு வழிய இசக்கிமுத்தையும் நல்லமுத்தையும் இமை கொட்டாமல் பார்த்தவண்ணம். மேலே என்ன பேசுகிரு.ர்கள் என்று கவனித் தான. என்ன சொன்னே, துத்தாவா? அது எங்கேப்பா இப்போ கெடைக்குது ?' என்று கேட்டான் நல்லமுத்து. " உனக்குத் தெரியாதா?-அதானே பார்த்தேன்; தெரிஞ் சிருந்தாத்தான் நீயும் அவனோடு போயிருப்பியே?’ என்ருன் இசக்கிமுத்து. அவனைப் போல என்னையும் மானங்கெட்ட பயலுன்ன நெனச்சுகிட்டே? நியாயமாப் பார்க்கப்போன அந்தக் காந்தி ராசா பேச்சைக் கேட்டு நாமே கள் குடிப்பதை நிறுத்தியிருக் கணும். அதுதான் இல்லேன்ன, காலேயும் கையையும் பிடிச்சுக் கிட்டுக் குழந்தைக்கு மருந்து ஊத்தருங்களே, அந்த மாதிரி நம்ம ராசாங்கம் கள்ளுக்கடையை எடுத்த அப்புறமாவது கள் குடிப்பதை நிறுத்தியிருக்கணும். ரெண்டுமில்லாம திருட்டுத் தனமா குடிக்கிறதுன்ன அது அக்குறும்பு இல்லே ?” " அக்குறும்புதான் : ஆன அதைக் கேட்க யாரு இருக் காங்க ?’ ’ ஏன் இல்லே? போலீசு ஜவானுங்க இல்லையா ? அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா இல்லே சங்கதி தெரியும் ?' ஊம், விட்டுத் தள்ளு! அவங்க இல்லே இப்போ அந்த அக்குறும்புக்காரனுங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிருனுங்க !' என்ன ! . ஆமா அண்ணேங்கிறேன் ! நேத்து மேலத் தெருவிலே ரெண்டு பயலுங்க குடிச்சுப்பிட்டு வந்து சண்டை போட்டுகிட்டு இருந்தானுங்க. அந்தப் பக்கமாய் போன ரெண்டு ஜவானுங்க அவனுங்களைப் பிடிச்சிக்கிட்டுப் போக ஒட்டமா ஓடி வந்தாங்க! -அவ்வளவுதான், அண்ணே! அந்தத் தெருவாரெல்லாம் ஒண் னக் கூடிக்கிட்டு அவங்களை அடி, அடி ன்னு அடிச்சுப் போட்டுட்டாங்க !' அப்பாலே ?’’ '" இன்ச்சுபெட்டரு, அவங்க, இவங்க எல்லாம் வந்து, அந்தத் தெருவிலே இருந்த முரட்டுப் பயல்களையெல்லாம் பிடிச்சுகிட்டுப் போருங்க!” .