பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 யாருக்கு விரோதி ! ' என்ன புத்தி கெட்ட பயலுங்க பார், அண்ணே! இவ னுங்க பெண்டாட்டி பிள்ளே பிழைக்கத்தானே கள்ளு குடிக்க வேணும்னு சொல்ருங்க? அதைக் கேட்டு ஒழுங்கா இல்லாம திருட்டுத்தனமா சாராயம் காய்ச்சறதும், கள்ளு குடிக்கிறதும் என்ன வேலைங்கிறேன்? இப்படிப்பட்டவனுங்களே நாமே பிடிச்சுப் போலீசு ஜவானுங்ககிட்டே ஒப்படைச்சாக்கூடக் குற்றமில்லை தான்!-நீ என்ன சொல்றே, அண்ணே?' ' நல்ல ஆளப்பா, நீ! நம்ம பெண்டாட்டிமாருங்க கழுத் திலே தாலி இருக்கக்கூடாதுங்கிறது உன் எண்ணமா?" 'அட, நீ கூட இப்படிப் பயந்து சாவுறியே! ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு!-அப்படியா நம்ம தலையை அவனுங்க "நறுக் குன்னு கிள்ளி எறிஞ்சிடுவானுங்க?" ஒண்ணுந் தெரியாம நீ பாட்டுக்குச் சும்மாப் பேசாதே, யாரு காதிலாச்சும் விழுந்து வைக்கப் போவுது !' எல்லாம் தெரிஞ்சித்தான் பேசறேன் ! எனக்கு இன்னும் என்ன தெரியணுங்கிறே நீ ?’’ -

  • நிசமாச் சொல்றேன், அண்ணே! இந்தக் கிராமத்திலே திருட்டுச் சாராயம் காய்ச்சறதுக்கு யார் பணம் கொடுக்கிருங்க எங்கிற விசயம் உனக்குத் தெரிஞ்சா நீ இப்படியெல்லாம் பேசவே மாட்டே!-ஆமாம் !' என்று முன்னும் பின்னும் பீதி யுடன் பார்த்துக் கொண்டே சொன்னன் இசக்கிமுத்து.

அடடே! அந்த ஆளே உனக்கு மட்டுந்தான் தெரியும்னு நீ நெனச்சுக்கிட்டிருக்கியா? போ அண்ணே, போ! அந்தக் குடி கெடுக்கும் மனுசனை எனக்கும்தான் தெரியும் ' என்ருன் நல்லமுத்து அலட்சியமாக. அதற்கு மேல் அவனுடைய வாயைக் கிண்டிவிட விரும்பாத இசக்கிமுத்து, ஐயையோ நம்ம தலைக்கு ஆபத்து இல்லே வந்துடும் போல இருக்குது? அந்த மனுசன் பேரை நீ வெளியே கிளியே சொல்லிப்பிடாதேப்பா ! எ ன் று கிசுகிசுத்துக் கொண்டே அவனுடைய வாயை இறுகப் பொத்தினன். நக்கீரன் உள்ளம் உடைந்தவனுய்த் தன்னுடைய வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். அப்போது அவனையும் அறியாமல் அவனுடைய உள்ளத்திலிருந்து ஏனே ஒரு கேள்வி எழுந்து, எங்கெல்லாமோ சுற்றியலேந்து, பதிலைத் தேடித்தேடித் திரிந்தது. அந்தக் கேள்வி வேறெதுமில்லை; இதுதான் : - "சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடி கெடுக்கும் மனுசன் யாராயிருக்கும்?