பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தெய்வயானை அப்புக்குட்டி முதலியாரோ பெரும் பணக்காரர்; ஊருக்கு எஜ மானர். அவரிடம் போய், ! உன் பெண்ணைக் கொடு என்று கேட்டால் கட்டி வைத்து அடிப்பார். நாவல்களில் படித்ததைப் போல் பெண்ணை நேரே பார்த்து என் காதலை வெளியிடுவதற்கு வேண்டிய தைரியம் இல்லை. அதெல்லாம் நாவல்களில் நடக்கும். வாழ்க்கையில் நடைபெருது. ஆதலால் ஓயாமல் சிந்தித்த வண்ணம் இருந்தேன். கடைசியாக ஒரு யுக்தி தோன்றியது. அந்த ஊரில் சமீபத்தில் கள்ளுச் சாராயக் கடைகள் ஏலம் போட இருந்தார்கள். அந்தக் கடைகளை ஏலம் எடுப்பதென்று தீர்மானித் தேன். விரைவில் பணம் சம்பாதித்து அப்புக்குட்டி முதலியாருக்கு சமமாவதற்கு இது ஒன்றுதான் வழி என்று எண்ணினேன். தன் நகைகளை விற்றும் பத்துப் பன்னிரண்டு வருஷங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்தும் என் தாயார் இருநூறு ரூபாய் வரையில் பணம் வைத்திருந்தாள். ஏலப்பணத்தைக் கட்டுவதற்கு அத் தொகையைக் கொடுக்கும்படி கேட்டேன். தாயார் முதலில் ஆட்சேபித்தாள். ' அந்தப் பாவத் தொழில் நமக்கு வேண்டாமப்பா ஏதோ உள்ளதை வைத்துக் கொண்டு திருப்தி அடைவோம்' என்ருள். நான் பிடிவாதம் பிடித்ததன் மேல் அவள், ' குழந்தாய் ! நம்முடைய குடும்ப சொத்தெல்லாம் எப்படி அழிந்தது தெரியுமா?’ என்று கேட்டாள் தெரியாதே! எப்படி?’ என்றேன், எல்லாம் உன் தகப்பன் குடித்தே ஒழித் துப் போட்டான். அந்தப் பாவம் என்னத்திற்கு ?’ என்ருள். எனக்குத் துரக்கிவாரிப் போட்டது. இதுவரையில் அந்த விஷயம் எனக்குத் தெரியாது; ஆனால் தெய்வயானையை நினைத்துக்கொண் டேன். தாயார் சொன்ன செய்தியிலிருந்து என்னுடைய தீர்மா னம் இன்னும் உறுதிப்பட்டது. ' அம்மா! கள்ளுக்கடையில் போன சொத்தை கள்ளுக்கடை மூலமாகவே சம்பாதித்துத் திரு வேன். அதுதான் தெய்வத்தின் சித்தம். இல்லாவிட்டால் எனக் கேன் இந்த யோசனை தோன்ற வேண்டும்?' என்றேன். கள்ளுக்கடைக்குப் போட்டி அதிகம். எடுக்க முடியவில்லை. சாராயக்கடை மட்டும் எடுத்தேன். வியாபாரம் நன்முய் நடந் தது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தேன். ஆளுல் என் கையிலும் பணம் அதிவேகமாகச் சேர்ந்து கொண்டு வந்தது. அடுத்த வருஷம் கள்ளுக்கடை, சாராயக்கடை இரண் டையும் எடுத்தேன். அப்புக்குட்டி முதலியாருடைய பெண்ணுக் காக நான் செய்த காரியங்களெல்லாம் அவர் மனத்தில் பொருமை யைத்தான் உண்டாக்கின. ஏனெனில் அப்போது அவருடைய கை இறங்கி வந்தது. கடன் அதிகமாயிற்று. கள்ளுக்கடைக்காரப் பயல்’ என்று என்னைப் பற்றி அவர் அவமதிப்பாய்ப் பேசியதாகக் கேள்விப் பட்டேன். அவருடைய அகம்பாவத்தை அடக்குவது